உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி பேராசிரியர் கல்வி தகுதிக்கு ஒப்புதல் கட்டாயம்

உதவி பேராசிரியர் கல்வி தகுதிக்கு ஒப்புதல் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பிலும், கலை, அறிவியல் கல்லுாரிகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பல்கலைகளின் இணைப்பு அங்கீகாரம் பெற்றும் செயல்படுகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகளும், உதவி பேராசிரியர்களை நியமனம் செய்ததும், அவர்களின் கல்வித்தகுதி குறித்த ஆவணங்களை, பல்கலைகளில் தாக்கல் செய்து நியமனத்தை உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் பணியில் நீடிக்க முடியாது என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்