உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மோசடி: நிறுவன பெண் அதிகாரி கைது

ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மோசடி: நிறுவன பெண் அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த, ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவன அதிபர் ராபினின் நெருங்கிய தோழி கைது செய்யப்பட்டார்.சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஆல்வின்; இவரது சகோதரர் ராபின். இவர்கள் இருவரும் அதே பகுதியில், ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக வாரம், 3,000 ரூபாய் தரப்படும் என்று, அறிவித்தனர். அதேபோல, 10,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்தில், 2.40 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இப்படி பல விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் இருந்து, 100 கோடி ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளனர். அந்த பணத்தில், சினிமா படங்கள் எடுக்கவும் முயற்சி செய்துள்ளனர்.இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கடந்தாண்டு டில்லியில் பதுங்கி இருந்த ஆல்வின், ராபின் ஆகியோரை கைது செய்தனர். அதன்பின், மோசடிக்கு உடந்தையாக இருந்த, முகவர்கள் பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.சமீபத்தில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ஆல்வின், ராபின் ஆகியோரின் சித்தப்பாவான புதுச்சேரியை சேர்ந்த ஆப்ரகாம், 45 கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி, ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில், 'மார்க்கெட்டிங்' பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ராபினின் நெருங்கிய தோழியான லீமா ரோஸ்,29, என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும், 1.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. முதலீட்டாளர்களிடம் இனிக்க இனிக்க பேசி, கோடிகளை பெற்று, ராபினிடம் லீமா ரோஸ் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mahendran Puru
ஜூன் 18, 2024 14:41

இவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் தப்பிக்கலாம், அமைச்சர் கூட ஆகலாம். சோன்வால், விஸ்வ சர்மா, சுவேந்து போன்றோர் சாரதா சிட்பண்டு மோசடியில் சம்பந்தப் பட்டவர்களே.


Narayanan
ஜூன் 17, 2024 16:58

தமிழ் நாடு திமுக கூட இது மாதிரி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள் .


venugopal s
ஜூன் 17, 2024 13:10

யார் என்ன சொன்னாலும் நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக உள்ளவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்கதை தான்!


enkeyem
ஜூன் 17, 2024 10:31

ஒரு இலட்சம் ரூபாய்க்கு வாரம் ரூபாய் மூண்டு ஆயிரம் வட்டி என்றால் வருடத்திற்கு சுமார் ஒருஇலட்சத்து நாற்பத்தைந்தாயிரம். அதாவது அசலுக்கு மேல் வட்டி மட்டும் ஒன்றரை மடங்கு. அதே போல மாதம் பத்து ஆயிரம் செலுத்தினால் அதாவது வருடத்திற்கு ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கு இரண்டு லட்சத்து நாட்பதாயிரம் மதிப்புள்ள நகை. இது சாத்தியமா என்பதை முதலீட்டாளர்கள் யோசிக்க வேண்டும். ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்பவர்களிடம் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இப்படி மோசடியாளர்கள் முளைக்கத்தான் செய்வார்கள்


kannan sundaresan
ஜூன் 17, 2024 09:49

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்கள் நம் மமக்கள்?


rasaa
ஜூன் 17, 2024 09:32

கர்த்தர் காப்பாற்றுவார்.


Bye Pass
ஜூன் 17, 2024 09:04

உடனே அப்படி நினைப்பது தவறில்லையா …


subramanian
ஜூன் 17, 2024 08:06

ஐயோ மனித உரிமை பறிப்பு என்று கதறுங்க.


tmranganathan
ஜூன் 17, 2024 07:14

ஆளும் தலைமைக்கு நெருக்கமானால் போதை நிதி ஊழல் செய்யலாமா? ஊழல் ஆட்களை ஒழித்தால் மட்டுமே தலை சாய்ந்துபோன தமிழகம் நிமிர முடியும்.


Natarajan Ramanathan
ஜூன் 17, 2024 07:02

சொர்ணாக்கா எல்லாம் நிதி நிறுவன அதிகாரியா .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை