உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கைதான அருள் மனைவி போலீசில் மனு

கணவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கைதான அருள் மனைவி போலீசில் மனு

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரைச் சேர்ந்தவர் அபிராமி, 34. அவர், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று அளித்த புகார்:என் கணவர் அருள், வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். அவரை, சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசார் கைது செய்து, பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் சேர்ந்து கைதான நபர்களை, ஐந்து நாள் காவலில் வைத்து விசாரித்தனர். அவர்களில், திருவேங்கடம் என்பவரை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசார் என் கணவரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்று விடுவரோ என, அச்சமாக உள்ளது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவரின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்