மேலும் செய்திகள்
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
1 hour(s) ago | 1
இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்:* கடலுார் மணிமுக்தா ஆறு, சேலம் வசிஷ்டா நதி, தஞ்சாவூர் பாட்டுவனாட்சி வடிகால், வேதபுரி ஆறு, திருப்பத்துார் வெள்ளக்கல் கானாறு, மலைக்கானாறு, வட்டமலைக்கரை ஓடை, உப்பாறு ஓடை, திருவண்ணாமலை பாம்பனாறு, திருச்சி பாலாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே, 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள்* கடலுார் கொள்ளிடம், திருவண்ணாமலை, செய்யாறு, திருவாரூர் திருமலைராஜன் ஆறு ஆகியவற்றின் குறுக்கே, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பணைகள்* சிவகங்கை மாவட்டத்தில், 7 முன்னாள் ஜமீன் கண்மாய்கள் 4.97 கோடி ரூபாயில் புனரமைப்பு* ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைகட்டு, திருநெல்வேலி பழவூர் அணைகட்டுகள், 3.70 கோடி ரூபாயில் புனரமைப்பு* தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருப்பத்துார், கோவை, வேலுார், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட, 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வழங்கு கால்வாய்கள், பாசன அமைப்புகளுக்கு, 116 கோடி ரூபாயில், மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டுமானம்.* திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் இரண்டு கரைகளிலும், 35 லட்சம் ரூபாயில் எல்லை கற்கள் நடும் பணி.---------பெண்கள், திருநங்கைகளுக்கு
ஆட்டோ மானியம்
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன்:* அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, 1,000 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க, 1 லட்சம் ரூபாய் மானியம்* தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலர்களுக்கு, 29.6 கோடி ரூபாய் செலவில், 'லேப்டாப்'கள்* கல்வி தொலைக்காட்சியில், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு* தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு-------------சபாநாயகர் கோரிக்கைசபாநாயகர் அப்பாவு, திசையன் விளை தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க, சட்டசபையில் கோரிக்கை வைத்தார். விரைவில் அமைப்பதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.------------இளஞ்சிவப்பு ஆட்டோ
சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்:* சென்னையில் 200 பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கி, 2 கோடி ரூபாய் செலவில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம்* சமூக நலத் துறை திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு, 72,000 ரூபாயில் இருந்து, 1.20 லட்சம் ரூபாயாக உயரும்* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில், 200 பேர் சுயதொழில் செய்ய, தலா 50,000 ரூபாய் மானியம். * அரசு சேவை இல்லங்கள் மற்றும் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவியருக்கு, ஒரு கோடி ரூபாயில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி.--------------------புதிய வாகன நிறுத்த கொள்கை
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி:* அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம், புவிசார் தகவல் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, புவிசார் கூறுகளுடன், மக்கள் பயன்பாட்டிற்கான, 'மொபைல் செயலி' உருவாக்கப்படும். * 300 சதுர மீட்டருக்குள் கட்டட பரப்பளவு கொண்ட, 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள, அனைத்து வணிக கட்டடங்களுக்கும், கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்* ஈரோடு மாவட்டம், சம்பத் நகரில், 108 அடுக்குமாடி குடியிருப்புகள்.* சென்னை பெருநகர பகுதிக்கு, புதிய வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கம்* அண்ணா பல்கலையில் புதிய பாடப்பிரிவாக, போக்குவரத்து திட்டமிடல் பட்ட மேற்படிப்பு அறிமுகம்-------மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000* கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறை தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக, நபர் ஒருவருக்கு, 50,000 ரூபாய் வழங்க, 5 கோடி ரூபாய் நிதி* கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக, தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு* மாநிலம் முழுதும் உள்ள, 45 மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில், வாகனப் பதிவெண் அடையாளம் காணும் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்த, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு-------------வாரிய வீடுகளை
சீரமைக்க ரூ.70 கோடி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்பாக அமைச்சர் அன்பரசன்:* தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், 70 கோடி ரூபாயில் சீரமைப்பு* நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன்பெறும் வகையில், தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்ட மானியம்* சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 1 கோடி ரூபாயில் தொழிற்பயிற்சி கூடம்* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளில் வசிக்கும் 2,000 பெண்களுக்கு, சிறப்பு சுய தொழில் பயிற்சி, 5,000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.------------------------------போட்டி தேர்வுக்கு
இலவச பயிற்சி
முதல்வர் ஸ்டாலின் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:* முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வீதம், 50 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை* பார்வைத் திறன், செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுக்கு, 'ஹெலன் கெல்லர்' விருது என பெயர்* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உணவூட்டு மானிய உதவித் தொகை, 1,200லிருந்து, 1,400 ரூபாயாகவும், சீருடை மானியம் 500லிருந்து, 600 ரூபாயாகவும் அதிகரிப்பு* மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு* மாற்றுத்திறனாளி மாணவர்கள் 200 பேருக்கு, அரசு போட்டித் தேர்வுகள் எழுத உணவு, தங்கும் விடுதி வசதியுடன் சென்னையில் பயிற்சி வகுப்புகள்.
1 hour(s) ago | 1