உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருடன் கைதான வாலிபர் மீது தாக்குதல்

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருடன் கைதான வாலிபர் மீது தாக்குதல்

கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ், 50.இவரது மகள் ேஷாபனா பெயரில் இருந்த 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களால், யுவராஜ், பிரவீன், ரகு, உள்ளிட்டோர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர், ஜூன், 9ல் கரூர் டவுன் போலீசில் புகாரளித்தார்.இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை ஜூலை, 17ல் கேரள மாநிலம், திருச்சூரில் கைது செய்தனர்.விஜயபாஸ்கரும், பிரவீனும் கரூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் காலை, மாலை நேரங்களில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு, கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு பிரவீன் கரூர் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின், காரில் கரூர் - கோவை சாலை ரெட்டிபாளையம் பகுதி டீக்கடைக்கு சென்றார்.அப்போது, மாருதி ஸ்விப்ட் காரில் பின் தொடர்ந்த ஐவர் கும்பல், பிரவீன் மீது தாக்குதல் நடத்தி தப்பியது. காயமடைந்த பிரவீன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரெட்டிபாளையம் பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். பிரவீனை தாக்கிய கும்பலில் ஒருவர், தப்பி ஓடும் போது அவரது மொபைல் போன் கீழே விழுந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்