உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி-

மத அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி-

சென்னை, : மத அடிப்படையில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, மயிலாப்பூர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மீது, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் அளித்துள்ள புகார் மனு:சென்னை உயர்மறை மாவட்டம் சார்பில் வெளியாகும், 'தி நியூர் லீடர்' இதழில், 'தேர்தல் 2024, மோடியின் இறுதி ஆட்டம்' என்ற தலைப்பில் கட்டுரையும், 'பொதுத்தேர்தல் 2024: தமிழ்நாடு பிஷப் கவுன்சிலின் அறிக்கை' என்ற தலைப்பில், பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியின் கருத்துக்களும் வெளியாகியுள்ளன.அதில், இந்தியாவையும், இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசையும் மத அடிப்படையில் விமர்சித்துள்ளார். 'இன்றைய மத்திய அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற சித்தாந்தத்தை நம் மீது திணிக்கிறது. ஒரே கட்சி, ஒற்றை தலைமை என பாசிச சித்தாந்தங்களுடன் இந்தியாவின் ஜனநாயக தத்துவத்தையை சிதைக்கிறது' என்று கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாது, 'கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களின் வழிபாட்டு உரிமைகள், வழிபாட்டு தலங்கள், மத கொண்டாட்டங்கள் தாக்கப்படுகின்றன.'மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில், மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பொது சிவில் சட்டம் என்ற பெயரில், எங்கள் மீது வகுப்புவாத சட்டத்தை திணிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மதவெறி கட்சிகளை நிராகரிக்க வேண்டும்' என்றும் விமர்சித்துள்ளார்.இதன் வாயிலாக மத உணர்வுகளை பயன்படுத்தி, வாக்காளர்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இதை கவனத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ