உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்

மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்

சென்னை: 'தி.மு.க.,வின் ஒரே சாதனை, கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்தது தான்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை; வாக்குறுதிகளையும் முழுதுமாக நிறைவேற்றவில்லை.வெறும் விளம்பரங்களை வைத்தே காலம் ஓட்டி கொண்டிருக்கும் 'ஸ்டிக்கர்' மாடல் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஸ்டிக்கர் ஒட்ட முயன்றுள்ளார்.பள்ளி கல்வி முன்னேற்றத்திற்கான மத்திய அரசின், 'சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி, 5,858.32 கோடி ரூபாய். தி.மு.க.,வின் சாதனைகளாக முதல்வர் காட்டி கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக் ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவை தான்.பள்ளி கல்வியில், தி.மு.க.,வின் ஒரே சாதனை கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்தது தான். உண்மை இப்படி இருக்க, கூச்சமே இல்லாமல் அவற்றை தி.மு.க.,வின் சாதனையாக காட்டி கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான, 1,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான, 'எல்காட்' நிறுவனத்திற்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான, 'கெல்ட்ரான்' நிறுவனத்திற்கு வழங்கியதன் பின்னணியை முதல்வர் தெளிவுபடுத்துவாரா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ராம்கி
ஜூன் 02, 2024 09:36

அறிவற்ற பதிவு வேண்டாமே வேணுகோபால். மாநில அரசுக்கு வணிகவரி, பத்திரப்பதிவு வரி, வீட்டுவரி, குடிநீர்வரி, வாகனபதிவுவரி போன்றவை வந்தன. மத்திய அரசுக்கு வருமானவரி, கலால் மற்றும் சுங்கவரி,ஏற்றுமதி இறக்குமதிவரி, மத்திய வணிகவரி முதலான வரிவிதிப்பு வகைகளில் வருவாய் வந்தது. இப்போது GST வரிவிதிப்பு மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.


M Ramachandran
ஜூன் 01, 2024 12:47

திமுகாவின் பல கீழ் மட்ட தொண்டார்கள் லூட் அடிக்கும் கும்பல் பதவியில் உட்கார்ந்து கணக்கிலடங்கா அளவு கொள்ளையடிப்பதை பார்த்து மனம் வெதும்பி அதைய வெளியிலும் பகர்கின்றன. இவர்கள் அடி மட்ட தொண்டார்கள் கட்சிக்காக கஷ்ட்ட பட்டு இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கையில் மேலால் மட்டத்தில் மக்கள் பணத்தை அளவுக்கு திக மாக சுருட்டுவதால் இனி இவர்கள் கொல்லையய அடிக்கா நாம் ஏன் நம் உயிர் கொடுத்து உழைக்க வேண்டும் என்ற என்னாம் மேலோங்க தொடக்கி விட்டது. இது நிச்சயம் 2026 தேரடிகளில் வெகுவாகா கனவில் மிதந்து கொண்டிருக்கும் கொள்ளையர்களுக்கு சம்மட்டி அடியாகா விழ போகிறது


Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:31

ஜூன் 4, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூரியன் உதிக்க வாய்ப்பில்லை. தாமரை மலரும். இத்துடன் வானிலை அறிக்கை முடிவுபெறுகிறது. ???


இறைவி
ஜூன் 01, 2024 12:20

வரி விதிப்பு பற்றி தெரிந்தால் கருத்து பதிவிடவும். இல்லையென்றால் பேசாமல் இருக்கவும். பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம். முன்பு காங்கிரஸ் ஆட்சியில், இறக்குமதி வரி, அதற்கு கூடுதல் வரி, எக்ஸைஸ் டூட்டி என்கிற உற்பத்தி வரி என்று 20 சதத்திற்கு மேல் வரி வருமான வரவு இருந்தது. மாநிலங்களுக்கு மாநில விற்பனை வரி வருவாய் பன்னிரண்டு முதல் இருபதெட்டு சதம் வரை இருந்தது. இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து சராசரியாக பதினெட்டு சதம் GST விதிக்கிறார்கள். இதில் சரிபாதி மாநிலங்களுக்கு நேரடியாக போகிறது. மீதம் உள்ளதில் பாதியை மாநிலங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். மீதம் உள்ளதில்தான் மத்திய அரசு மாநில திட்டங்களுக்கு நிதி ஒடுக்குகிறது . மாநிலம் வளர்ச்சிக்கு செலவு செய்யாமல் ஒட்டுக்குக்காக மக்களுக்கு உரிமைதொகை என்று பணம் கொடுத்தால் வளர்ச்சிக்கு பணம் இல்லாமல்தான் போகும். மத்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை.


krishna
ஜூன் 01, 2024 11:58

VIDIYALAAR THARPERUMAI THAMIZHGA KALVI THURAI 4 KAAL PAAICHALIL POGIRADHAAM.


Sivasankaran Kannan
ஜூன் 01, 2024 11:56

50 சதவீத GST முழுதுமாக திராவிட கொள்ளையர் கையில். அந்த டாஸ்மாக் வருமானம் பற்றி பேச விட வேண்டியது..


MADHAVAN
ஜூன் 01, 2024 11:51

தமிழகத்துக்கு 10 ரூபா குடுத்துட்டு 100 கோடி ரூபாய் குடுத்த மாதிரி பில்டப்பு


venugopal s
ஜூன் 01, 2024 11:02

மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்த வரி வருமானம் எல்லாவற்றையும் மத்திய அரசுக்கு நேரடியாக செல்வது போல் மாற்றி விட்டு அதன் மூலம் தங்கள் இஷ்டத்துக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது மத்திய பாஜக அரசு. அதனால் மாநிலங்கள் மத்திய அரசை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதன் காரணமாக எல்லா திட்டங்களையும் மத்திய அரசின் நிதியுதவி என்று சொல்வது ஏற்புடையதல்ல. மத்திய அரசின் வரி வருவாய் எல்லாமே மாநிலங்களில் இருந்து தான் வருகிறது, மத்திய அரசுக்கு என்று தனிப்பட்ட வருவாய் எதுவும் கிடையாது.


சி சொர்ணரதி
ஜூன் 01, 2024 12:10

அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளபடி தான் எல்லாம் நடக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாக மத்திய அரசின் வரன்முறைகள் மற்றும் மாநிலங்கள் வரன்முறைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் ஒரு அங்கமே தமிழகம். மன்னர் முறை ஆட்சி இல்லை.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 12:52

மாநிலம் என்பதே தாற்காலிக அமைப்பு. கம்பெனியின் கிளை போன்றவைதான். மத்திய அரசு நினைத்தால் தெலங்கானா போல புதிதாக உருவாக்கலாம். காஷ்மீர் போல மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். மாநிலங்களுக்கென தனியான சிறப்புரிமை ஏதுமில்லை. ஒரே விஷயத்தைப் பற்றி மாநில அரசு, மத்திய அரசு இரண்டும் சட்டமியற்றினால் மத்திய சட்டமே செல்லும்.


duruvasar
ஜூன் 01, 2024 10:09

திமுகவின் அடிப்படை ஆதார கொள்கையே ஸ்டிக்கர் ஒட்டுவது தான். அதை தொடர்ந்து செய்துகொண்டே தான் இருப்பார்கள்.


enkeyem
ஜூன் 01, 2024 10:07

மாநிலங்களுக்கு வரும் வருமானம் பொது மக்களின் வரிப்பணம். அதை எதோ தனது அப்பன் வீடு பணத்தில் இருந்து செலவு செய்தது போல அரசின் திட்டங்களுக்கு ஆளும் கட்சியினர் தங்களது பெயர்களை ஏன் வைக்கவேண்டும்?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ