உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிக்கு உண்மையாக இருங்கள்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை

கட்சிக்கு உண்மையாக இருங்கள்: எம்.பி.,க்களுக்கு முதல்வர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கட்சிக்கும், ஓட்டளித்த மக்களுக்கும் உண்மையாக இருங்கள்,'' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.சென்னையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவது, சாதாரணமான சாதனை அல்ல; வரலாற்று சிறப்பு மிக்க சாதனை. இந்த சாதனை வரலாற்றில், நீங்களும் இருக்கிறீர்கள் என்பது தான் உங்களுக்கு உள்ள பெருமை. வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில் தான், உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தகைய வாய்ப்பை வழங்கிய கட்சிக்கும், உங்களுக்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கும் உண்மையாக இருங்கள். இது தான் நான் வைக்கும் வேண்டுகோள்.தி.மு.க., என்ற கொள்கை குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லி செல்லும் நீங்கள், என் பெயரையும், கட்சியின் பெயரையும் காப்பாற்ற வேண்டும். ஒரு சில மாநிலங்களில், தேர்தல் முடிவுகள் லேசாக மாறி இருந்தால், மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.அதேநேரம், மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல, ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கு செல்வாக்கை கூட பா.ஜ., பெறவில்லை. இந்த சூழலில், நாம் பார்லிமென்டில், தமிழகத்துக்கான கோரிக்கைகளை எடுத்து வைத்து வாதாட வேண்டும்; போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை, நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம்; அவை அனைத்தையும், பார்லிமென்டில் எடுத்து வைத்து, அதை செயல்பட வைக்க வேண்டும்.பலவீனமான பா.ஜ., அரசை, நம்முடைய முழக்கங்கள் வழியாக, செயல்பட வைக்க வேண்டிய கடமை, உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. கட்சியில் கடந்த கால நிலைப்பாடுகளை உணர்ந்து, தெரிந்து உரையாற்றுங்கள். பார்லிமென்டுக்கு தவறாமல் போக வேண்டும். முழுமையாக இருந்து அனைவர் பேச்சையும் கேட்க வேண்டும். பா.ஜ.,வுக்கு சரிக்கு சமமாக இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் இருக்கப் போகின்றனர். இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. எனவே, எம்.பி.,க்களின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பர். அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து பேசி, நன்றி அறிவிப்புக்கான சுற்றுப்பயண திட்டத்தை விரைவில் தயார் செய்யுங்கள். அனைத்து பகுதிகளுக்கும் சென்று, மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.அனைத்து எம்.பி.,க்களும், தங்களுக்கான அலுவலகத்தை துவக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். உங்கள் மொபைல் போன் எண், இ - மெயில் விபரங்களை, தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கழுகுப் பார்வை
ஜூன் 09, 2024 20:33

புத்தி இப்படி. சுரண்டியே பழக்கபட்டவர்கள் வாயில் இப்படி தான் வரும் ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு உண்மையாக இருக்க சொல்லாமல், கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டுமாம்..


Ramesh Sargam
ஜூன் 09, 2024 12:44

உண்மையை பற்றி பேச இவர் லாயக்கில்லை. உண்மைக்கும், இவருக்கும் வெகு தூரம்.


Kumar Kumzi
ஜூன் 09, 2024 09:53

அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ஓவானு புரூடா விட்டியே அது உண்மையா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த நீ பேசலாமா


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 09:40

அதாவது ஆளுக்கு ஐம்பது கோடி என்று அமித்ஷா கூப்பிட்டாலும் போய்விடக்கூடாது என்று காலைப்பிடித்து கெஞ்சுவது போல இருக்கிறது. ஆனால் துச்சாதனனை கூப்பிட்டு கட்சியை எப்படி உடைக்கலாம் என்று யோசனை கேட்டால் இதற்க்கெல்லாம் தீர்வு கிடையாது. டக்ளஸை கூப்பிட்டு இணை அமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்று பதவி கொடுத்தால் தீம்காவின் லீலைகள் அனைத்தும் எளிதில் பட்டியலிடப்பட்டு வனவாசம் செல்ல வேண்டி வரலாம்.


Barakat Ali
ஜூன் 09, 2024 09:37

பொருளுரை என்ன? கட்டிங் மட்டும் எனது மன்னர் குடும்பத்துக்கு கரெக்ட்டா வரலேன்னா.... இருக்கு ..........


ஆரூர் ரங்
ஜூன் 09, 2024 09:28

அண்ணாவுக்கே உண்மையாக இல்லை. டீ பக்கோடா வாங்கக் கொடுத்த பணத்தில் கூட ஐம்பது பைசா ஆட்டை.? தொண்டரும் அவ்வழி.


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 09:17

40 MP பெற்றும்... தமிழக மக்களுக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லை....அத்தனை பேரும் பாராளுமன்ற கேண்டீனில் போய் வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வர போகிறார்கள்.......அவ்வளவு தான்.


A
ஜூன் 09, 2024 13:30

not saadhaa vadai... masaal vadai.. history mukkiyam !


S SRINIVASAN
ஜூன் 09, 2024 07:48

be loyal to only DMK not for TN people, go to parliament shout at NDA come with empty hands, TN people definitely bless us, you speak ill about Hindu gods in parliament no issues TN people will vote for us, because we are smart but stupidity is still there with TN people


A
ஜூன் 09, 2024 13:29

they will not come back empty hands.. ovvoruththanum 10 masaal vadai eduththuttu varuvaanuva


Mani . V
ஜூன் 09, 2024 07:10

கனிம வளங்களைத் திருடி கட்சிக்கு உண்மையாக இருங்கள்.


Svs Yaadum oore
ஜூன் 09, 2024 06:51

கட்சிக்கு உண்மையாக இல்லாதவன் எல்லாம் எம் பி கள் ஆகிவிட்டானா ? .....இது ராமசாமி மண் இல்லையா ??....இன்னமும் 100 வருஷத்திற்கு நீட் தேர்வு , மாநில உரிமை , மத சார்பின்மையாக மதத்தின் பெயரால் உள்ள கட்சிகளுடன் கூட்டணி என்று தமிழ் நாட்டை சுத்தமாக துடைத்து தூர் வாரி விடலாம் ...தமிழ் தமிழன் தமிழன்டா ...


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 09:30

"தமிழ் நாட்டை சுத்தமாக துடைத்து தூர் வாரி விடலாம்" - நச் என்ற வாசகம். வேங்கை வயல் மற்றும் இவர்கள் சவுக்கரை கையாளும் விதம் அதைத்தான் சொல்கிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ