உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெப்பம் தணிக்க கடற்கரைக்கு செல்வோரை துரத்தக்கூடாது: ஐகோர்ட் நோட்டீஸ்

வெப்பம் தணிக்க கடற்கரைக்கு செல்வோரை துரத்தக்கூடாது: ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை போலீசார் துரத்தக் கூடாது எனக்கோரிய வழக்கில் மாநகர போலீஸ் ஆணையர் மற்றும் டி.ஜி.பி., பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனு: கோடை வெப்பம் அதிகரிப்பால் வீடுகளுக்குள் மக்கள் முடங்குவதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. நகர்ப்புறமயத்தால், நகரங்களில் தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் பெருகி விட்டன. ஏழை எளிய மக்களுக்கு வீடுகளில் குளிர்சாதன வசதியில்லை. அதனால் கடற்கரையும், பூங்காங்களும் தான் அவர்களுக்கு நிவாரணம்.கடந்த 10ம் தேதி என் குடும்பத்தினருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றேன். இரவு 9:30 மணியளவில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து கடற்கரையை விட்டு செல்லுமாறு கூறினார். எங்களை மட்டுமல்ல கோடை வெப்பத்தை தணிக்க வந்த அனைவரையும் போலீசார் விரட்டினர். தயக்கம் காட்டிய மக்களுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்தது.வெப்பத்தை தணிக்க போக்குவரத்து சிக்னல்களில் மேற்கூரை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடற்கரை, பூங்காங்களில், இரவு நேரங்களிலும் மக்களை அனுமதிக்கும்படி டி.ஜி.பி., - மாநகர போலீஸ் ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினேன். மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரை, பூங்காங்களுக்கு வருபவர்களை துரத்தக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்த, ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க மாநகர போலீஸ் ஆணையர் மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழ்வேள்
மே 29, 2024 19:50

திராவிட சமாதிகளுக்கும் , திராவிஷ கட்சி அல்லக்கை கும்பலுக்கும் பாடிகார்ட் வேலை பார்க்கும் தமிழக போலீசுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா?


Anbuselvan
மே 29, 2024 14:55

இரவு ஒன்பதரை மணிக்கு அந்த இருட்டில் என்ன வெப்பம் வெளியே இருக்க போகிறது? இதுவே தொடர்ந்து இந்த நேரத்தில் திருட்டு மற்றும் சட்ட புறம்பான செயல்கள் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அதற்கும் போலீஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். என்ன உலகமைய்யா இது


ஆரூர் ரங்
மே 29, 2024 14:45

கடலில் இறங்கி ஆண்டுக்கு பத்து பேருக்கு மேல் இறக்கின்றனர். போலீஸ் இல்லாவிட்டால் இன்னும் அதிகரிக்கும். இரவில் கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது கடினம்.


Vathsan
மே 29, 2024 13:26

சுவாமிநாதன் தீர்ப்பா. மக்களை 9:30 க்கு மேலே அனுமதிக்காத காவல்துறையின் நடவடிக்கை சரிதான். இந்த நீதிபதி ஒரு விளம்பரப்பிரியர். ஹைகோர்ட்க்கு கண்டனம்.


Aroul
மே 30, 2024 04:55

அவரை விளம்பரப்படுத்தியதே திமுகதான்.


Gopinathan S
மே 29, 2024 13:18

வெப்பம் தணிக்க செல்வதில் தவறில்லை... ஆனால் சில கூட்டம் "சூட்டை" தவிர்க்க செல்லும். அவர்களை வெளுப்பதில் தவறில்லை.


Lion Drsekar
மே 29, 2024 10:19

9.30 மணிக்கு மேல் தனியாக அல்லது குடும்பத்துடன் கடற்கரையில் இருந்தால் பாதுகாப்பு இல்லை, மாறாக அதிக அளவில் காவலர்களை பணியில் அமர்த்தினால் நன்றாக இருக்கும் . வந்தே மாதரம்


sankaranarayanan
மே 29, 2024 09:35

இவர்கள் போலீசு பாதுகாப்பு கேட்க முடியாது ஏற்கெனவே இரவு நேரங்களில் போலிசு பாதுகாப்பு கொடுப்பது அரசுக்கு கடமையதுடன் கஷ்டமானது இதை ஏற்று நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தால் பிறகு நாட்டில் அமைதி கெட்டு செத்துவிடும் கரையே இல்லாத இடங்களில் மக்கள் என்ன செய்கிறார்கள் அதையே இவர்களும் பின்பற்றலாம்


Sriraman Ts
மே 29, 2024 06:28

போலீஸ் பொதுமக்களை இரவு 9.30க்கு பிறகுகடற்கரையில் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை.இது தவறு அல்ல.நடவடிக்கை அனுபவத்தனால்தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை