எஸ்.ஆர்.எம்., வளாகத்தில் பறவை மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவன வளாகத்தில், ‘சிக்ரா’ எனப்படும் வல்லுாறு பறவை பறக்க முடியாமல் தவித்த நிலையில், நேற்று காலை மாணவர்களால் மீட்கப்பட்டது. வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, அந்த பறவை சிகிச்சைக்கு பின், கூடலுார் சரக வனப்பகுதியில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.