உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு

8 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, 8 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது' என, உளவுத்துறை வழங்கிய தகவலை, பா.ஜ., மேலிடம், தமிழக நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளது.தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக பா.ஜ., மூன்றாவது அணி அமைத்தது. கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., - அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு இயக்கம், புதிய நீதி கட்சி - ஐ.ஜே.கே., - த.ம.மு.க., - இ.ம.க.மு.க., ஆகிய கட்சிகள் இருந்தன. இதுதவிர, சிறிய கட்சிகள், சமூக அமைப்புகள் என மொத்தம், 125 இயக்கங்கள் ஆதரவு அளித்தன. மொத்தம், 19 தொகுதிகளில் பா.ஜ.,வும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில், கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மற்ற கூட்டணி கட்சிகள், தங்களின் கட்சி சின்னத்திலும், சுயேச்சை சின்னத்திலும் போட்டியிட்டன. தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தொகுதி வாரியாக பா.ஜ.,வுக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம், வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து, உளவு துறை தகவல் சேகரித்து, கட்சி மேலிடத்திடம் வழங்கிஉள்ளது.அதன் அடிப்படையில், 'கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, தேனி, தர்மபுரி, ராமநாதபுரம், வேலுார், பொள்ளாச்சி ஆகிய, 8 தொகுதிகளில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

venugopal s
ஏப் 23, 2024 17:06

பார்க்கத் தானே போகிறோம் ஜூன் நான்காம் தேதி!


Ram
ஏப் 23, 2024 16:15

பொள்ளாச்சி தொகுதில பூத் ஏஜென்டுக்கே ஆட்கள் இல்லை இதுல பொள்ளாச்சில ஜெயிக்கிறதா ஹா ஹா ஹா


SIVA
ஏப் 23, 2024 17:45

எந்த தொகுதியில் பூத் ஏஜெண்டுகாகா ஓட்டு போடுகின்றார்கள்


Kumar
ஏப் 23, 2024 16:12

நிச்சயம் வெற்றி பெறும்...நீலகிரியில் L.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவருக்கு இந்த வெற்றி தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது...


N.R.
ஏப் 23, 2024 15:49

குட் ஜோக்


கனோஜ் ஆங்ரே
ஏப் 23, 2024 14:25

காசா பணமா அவுத்துவிடுங்க? ஏன் ஒரு நாற்பது தொகுதியில் ஜெயிக்கும்னு சொல்லு புளுகுறதுக்கு ஏது எல்லை?


Sampath
ஏப் 23, 2024 14:46

உங்கள் வயிறு எரியும்னா, நானூறு தொகுதியில் வெற்றி பெறுவோம்னு சொல்லுவோம்


கனோஜ் ஆங்ரே
ஏப் 23, 2024 14:24

உளவு துறை தகவல் சேகரித்து, கட்சி மேலிடத்திடம் வழங்கி உள்ள செய்தி என்னன்னா “தமிழ்நாட்டில் தொகுதிகளில் பாஜக ஜெயிக்கும்”னு நல்லா ?


சொல்லின் செல்வன்
ஏப் 23, 2024 14:20

ஒரு கோடிப்பே


Sridhar
ஏப் 23, 2024 13:35

பார்த்துக்கொண்டே இருங்கள், எல்லாம் சும்மா, ஜூன் அன்று முடிவுகள் வெளியாகும்போது மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்துக்கொண்டிருக்கும் திருட்டு கும்பலின் மீது மக்களின் வெறுப்பு மொத்தமாக வெளிப்படும்போது, இதை ஒரு ஊடகமும் சொல்லவே இல்லையே என்று எல்லோரும் வியக்கப்போகிறார்கள்


MADHAVAN
ஏப் 23, 2024 13:21

இருப்பத்து மூன்று தொகுதிகளில் டெபாசிட் காலி, ஏழு இடங்களில் டெபாசிட் கிடைக்கும், அதும் தினகரன், ஓ பி எஸ், தமிழிசை, பொன்னாறு அண்ணாமலை, இப்படி இருக்குறவுங்கதான், மற்ற இடங்களில் கூட்டணி கட்சி ஓட்டுக்களை பெரும், ஆனாலும் வெற்றி பெறாது


MADHAVAN
ஏப் 23, 2024 13:17

நல்லா குறித்துவைத்துகொள்ளுங்கள் ஒரு இடத்தில்கூட பீ சப்பி வெற்றிபெறாது, இங்க வந்து கருத்துப்போடும் பல வாசகர்கள் ஓட்டுப்போட கூட வரவில்லை, தென்சென்னை ல இருக்குற நாற்பத்தி சதவீதம்பெரு ஓட்டுபோடல, மக்கள்கிட்ட பீ சப்பி வெறுப்பை தினிக்குது, இது இங்கு எடுபடாது,


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி