மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 hour(s) ago | 2
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
5 hour(s) ago | 1
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
6 hour(s) ago | 2
கோவை:கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை:'தமிழகத்தில் தொடர் தோல்வி, படு தோல்வி அடைந்த பிறகும், மத்திய அரசு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.அவர் முதல்வராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. மூன்று ஆண்டுகளும் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்.பத்தாண்டு பா.ஜ., ஆட்சியில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், மருத்துவ கல்லுாரிகள், புதிய ரயில்கள் என, உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை.மத்திய பா.ஜ., அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாகவே நடத்துகிறது; பாகுபாடு காட்டவில்லை. மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைலேயே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரியிலும், சமமான பங்கீடு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
5 hour(s) ago | 2
5 hour(s) ago | 1
6 hour(s) ago | 2