உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை கடக்கும் படகுகள்

ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை கடக்கும் படகுகள்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தடையை மீறி, புதிய ரயில் துாக்கு பாலத்தை ஆபத்தை உணராமல் மீனவர்கள் நாட்டுப்படகில் கடந்து செல்வதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் 2020ல் துவங்கிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி முடிந்து, தற்போது அதன் நடுவில் 650 டன் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி நடக்கிறது. இதற்காக பாலம் நடுவில் கடலில் இரும்பு துாண்கள் ஊன்றி இதன் மீது துாக்கு பாலத்தை வைத்து, இரு பாலத்தை ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் பொருத்தி வருகின்றனர். இச்சூழலில் பாலத்தை படகில் கடந்து செல்ல முடியாததாலும், கனரக தொழில்நுட்ப பணி நடப்பதாலும் இரும்பு பாகங்கள் எதிர்பாராமல் படகுகள் மீது விழுந்து மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், கடந்த ஜூன் முதல் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் இதனை பொருட்படுத்தாத மீனவர்கள் தடையை மீறி கடலில் உள்ள இரும்பு துாண்கள் இடையில் நாட்டுப்படகில் நுழைந்து கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளதால், இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 27, 2024 09:04

மீனவர்கள் தடைகளை மீறி பல குற்றங்கள் புரிகின்றனர்.அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஒரு சேர்ந்து போராடுகின்றனர்.


முக்கிய வீடியோ