உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் தற்கொலை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

போடி: தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் அருள்மொழி பாண்டியன் 39. எல்லை பாதுகாப்பு படைவீரர். மனைவி சர்மிளா 34. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அருள்மொழி பாண்டியன் 2 ஆண்டுகளாக வயிற்று வலி, கணையம் பாதிப்பால் சிகிச்சை பெற்றார். 7 நாட்களுக்கு முன்பு டில்லியில் இருந்து கணவன், மனைவி சங்கராபுரத்திற்கு விடுமுறையில் வந்துள்ளனர். மூன்று நாட்களாக அருள்மொழி பாண்டியனுக்கு வயிற்று வலி அதிகம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரிக்கின்றனர். சங்கராபுரத்திற்கு எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ., அவிஜித் மஜூதார் தலைமையிலான பாதுகாப்பு படை வீரர்கள் வந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தி அருள்மொழி பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ