உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணனை அடித்து கொன்று கிணற்றில் வீசிய தம்பி கைது

அண்ணனை அடித்து கொன்று கிணற்றில் வீசிய தம்பி கைது

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, சாலகொக்கராப்பட்டியைச் சேர்ந்தவர் பாபு, 36. இவரது தம்பி மூர்த்தி, 34. இவரிடம், மது குடிக்க பணம் கேட்டு, பாபு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூர்த்தி, கடந்த, 4 இரவு, 8:00 மணிக்கு மதுபோதையில் துாங்கிக் கொண்டிருந்த பாபுவை, கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.இதையடுத்து மூர்த்தி, பாபுவின் உடலை சாக்கு பையில் கட்டி, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் வீசி விட்டு, ஒன்றும் நடக்காதது போல இருந்தார்.நேற்று மதியம் அருகில் வசிப்போர் கிணற்றில் மூட்டை மிதப்பதை பார்த்து, மத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் வந்து மூட்டையை மீட்டு, அதிலிருந்த பாபுவின் சடலத்தை வெளியே எடுத்தனர்.போலீசார் விசாரணையில், அண்ணன் பாபுவை, தம்பி மூர்த்தி கட்டையால் அடித்து கொன்றது தெரிந்ததைத் தொடர்ந்து, தம்பியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்