உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.எஸ்.ஐ., நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஹசீனாவோ, ஹேமாவோ ஆசிரியராக முடியுமா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

சி.எஸ்.ஐ., நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஹசீனாவோ, ஹேமாவோ ஆசிரியராக முடியுமா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு ஹசீனா அல்லது ஹேமா ஆசிரியர்களாக நியமிக்கப்படுவரா என கேள்வி எழுகிறது.

சொந்த விதி

திருநெல்வேலி திருச்சபை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் சபை. இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு. திருநெல்வேலி மறைமாவட்ட சொந்த விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. மறைமாவட்டம் துவக்கப் பள்ளி முதல் கல்லுாரி வரை பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. அவை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் சம்பள செலவுகளை, அரசிடம் இருந்து மானியமாக பெறுகின்றனர். அரசிடமிருந்து மறைமாவட்டம் பெறும் ஆண்டு மானியம் 600 கோடி ரூபாய். யு.ஜி.சி., நிதி அளிக்கிறது.மாநில அரசின் நிதி உதவி பெறுவதற்கான உரிமையுடன், சிறந்த, திறமையான ஆசிரியர்களை நியமிக்கும் கடமை உள்ளது. மறைமாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமாவட்டக் கொள்கை எனில், அது நிச்சயமாக நல்ல நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது.சந்தேகத்திற்கு இடமின்றி, சிறுபான்மை நிறுவன நிர்வாகம் பணி நியமனம் செய்யும். ஜாதி, மதம் மற்றும் மத பின்னணியை பொருட்படுத்தாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலியிடங்களை முறையாக அறிவிக்க வேண்டும்.ஆட்சேர்ப்பு முறையை முன்னரே தீர்மானித்துவிட்டால், இவை அனைத்தும் வீணாகிவிடும். அதனால் தான் வெளிப்படைத்தன்மை வேண்டும். தேர்விற்கான விதிமுறைகளை நிர்வாகங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

முரணானது

நேர்காணல் நடவடிக்கைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோர் எவ்வாறு தேர்வு நடந்தது என்பதை அறிய வழிவகை செய்ய வேண்டும்.மறைமாவட்ட பதிவு மூப்பு பட்டியலிலிருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. நியமனத்திற்கு ஹசீனா மற்றும் ஹேமா கூட பரிசீலிக்கப்பட மாட்டார்கள். நியமனத்தின் முழு நடைமுறையும் அரசியலமைப்பிற்கு முரணானது; பாரபட்சமானது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது.அரசின் கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என, மதச்சார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகள் கோருகின்றன.உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. மனுதாரர் கோரும் நிவாரணம் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

ஆரூர் ரங்
ஆக 11, 2024 15:45

இந்த CSI யின் ஆண்டுகளுக்குப் விழாவில் இது உங்களால் அமைந்த ஆட்சி என்றார் முதல்வர். அப்புறம் யாராவது எதிர்த்து கேள்வி கேப்பாங்களா?


SIVA
ஆக 11, 2024 12:46

ஹிந்து மடங்கள் எதுவும் அரசின் நிதி உதவி பெறுவது இல்லை, அது தான் சட்டம், கேட்டால் மத சார்பின்மை என்று வசனம் பேசுவார்கள். ஹிந்து கோவிலில் இருந்து அரசு தான் நிதி உதவி பெறுகின்றது, மூவாயிரம் கோடி மதிப்பு உள்ள ஹிந்து கோயில் சொத்துக்களை மீட்டோம் என்று சொல்பவர்கள், அந்த சொத்துக்கள் இதனை நாட்கள் யார் வைத்து இருந்தார்கள் என்று அறிக்கை விட வேண்டியது தானே ....


Jay
ஆக 11, 2024 11:46

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் முறைகேடாக தகுதி இல்லாமல் உள்ளே வரும் ஆசிரியர்களை எடுக்க ஒரு வாய்ப்பு. அது சிறுபான்மையினர் பள்ளியோ அல்லது அரசு பள்ளியாகவோ இருக்கட்டும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்துவது அவர்கள் லட்சியமான மதமாற்றம்தான். கல்வி பற்றிய விஷயங்களை இதை தாண்டித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 11, 2024 11:33

அறநிலையத்துறையிலும் கிறிஸ்தவர்கள் பதவி பெறலாம். ஆனால் எங்கள் மன்னர் குடும்பத்தில் பிறந்தால் துணை முதல்வராக ஆகலாம்... பெருமிதம் ........


Kundalakesi
ஆக 11, 2024 11:33

First Christians must have legal and personal Christian name only which shd be identifiable.


Sridhar
ஆக 11, 2024 11:16

இதையெல்லாம் கண்டுக்காம இருக்கறதுக்குத்தானே அவுங்க கொள்ளை கொள்ளையா மாநில ஆளும்கட்சிக்கு பணம் கொடுக்கறாங்க? அதுனாலதானே திருட்டு கும்பலும் இது உங்கள் ஆட்சின்னு கூசாம சொல்லிட்டு இருக்குது. இந்த விவரமெல்லாம் தெரியாம கோர்ட்டு இடையில புகுந்து குட்டைய கிளப்பினா, பாதர் பாவம் என்ன பண்ணுவாரு?


ஆரூர் ரங்
ஆக 11, 2024 11:10

ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் பிடுங்கி சர்ச்களுக்கு அளித்த சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 11, 2024 09:56

CSI யின் சொத்துக்களின் மதிப்பு லட்சம் கோடிக்கும் மேல். ஆனாலும் இதன் பிஷப் மருத்துவ சீட்களை விற்று ஏமாற்றிய புகாரில் சிக்கியுள்ளார். அரசு நிலத்தை தமது எனக் கூறி பெங்களூரு மெட்ரோவுக்கு விற்ற புகார் வேறு. இவர்களுக்கு 600 கோடி அரசு நிதி என்பது அக்கிரமம்.


sankaran
ஆக 11, 2024 09:52

மதம் மாறியர்வர்களை எப்படி சிறுபான்மை என்று கருத முடியும்? மக்களின் வரி பணத்தில் இவர்களுக்கு நிதி அளித்து அவர்களின் மதத்தை பரப்புவதற்கு எதற்கு நிதி அளிக்க வேண்டும்?.


Sampath Kumar
ஆக 11, 2024 09:44

இதே மாதிரி கேள்வியை ஹிந்து மடங்கள் நடத்தும் பள்ளிகளிடமும் கேக்க வேண்டும் நீதி மன்றம் நீதி அனைவர்க்கும் பொதுவானது


Pandi Muni
ஆக 11, 2024 10:21

இந்து மடங்களை அரசு நடத்துகிறதா இல்லை அரசின் மக்களின் வரிப்பணத்தில் நடத்துகிறார்களா? சிறுபான்மை எனும் பெயரில் இந்துக்களின் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொள்ளும் கூட்டம் இந்த நாட்டிற்கு தேவையா?


sridhar
ஆக 11, 2024 11:09

வந்துட்டியா, எங்கே காணுமேன்னு பார்த்தேன்


Duruvesan
ஆக 11, 2024 11:34

மூர்க்கன், மாதரச டிகிரி முரசொலி மூளை, அப்பா வைத்து உள்ள பெயர் இல்ல, உனக்கு அறிவு இருக்காதுன்னு எல்லோருக்கும் தெரியும்.பாதிரி ஹிந்துவா இருக்கணும்னு சொல்லல, மக்களின் வரி பணத்தில் 70% ஹிந்துக்கள் நடத்தும் பள்ளியில் எல்லோரையும் ஆசிரியராக நியமிங்க னு சொல்றாங்க


ganapathy
ஆக 11, 2024 11:41

அட திராவிட உளுத்தம்பருப்பே, உன்னோட ... பெயரில் வல்லத்தில் மணி நடத்தும் பள்ளி கல்லூரிகளில் சமதர்ம செகுலரிஸம் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரியுமா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ