உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுகிய வட்டத்துக்குள் ஜெ.,வை வைக்கலாமா?

குறுகிய வட்டத்துக்குள் ஜெ.,வை வைக்கலாமா?

முன்னாள் கவர்னர் தமிழிசை கூறியதாவது: தமிழகத்திலும் மத்தியிலும் பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. தனி மெஜாரிட்டிக்கான இடங்களை தற்போதே தாண்டி விட்டோம். பிரித்தாளும் அரசியலை உருவாக்கியது தி.மு.க., தான். மாநிலங்களை பிரதமர் பிரித்தாளுகிறார் என்றும், தமிழகத்திற்கு எதிராக இருக்கிறார் என்றும், மாய தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். தமிழ் மக்கள் மீது பிரதமர் மோடி எப்போதும் அன்புடன் உள்ளார். பா.ஜ.,விடம் மதவாதம் இல்லை; மனிதவாதம் தான் இருக்கிறது.தோல்வி பயத்தில் பா.ஜ., இருப்பது போன்ற மாய தோற்றத்தை, 'இண்டியா' கூட்டணி உருவாக்க பார்க்கிறது. மத்தியில் பா.ஜ., தலைமையில் வலுவான அரசு வரும்.ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஹிந்துத்துவா தலைவர் ஜெயலலலிதா. கரசேவகர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதுடன், ராமர் கோவில் தேவை என்று தொண்டர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பியதையும் ஆதரித்தார்.ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், ராமர் கோவில் சென்று வழிபட்டு விட்டு, '100 ஆண்டு ராமர் கோவில் என்ற கனவு நனவாகியுள்ளது' கூறியிருப்பார்.நாங்கள் ஜெயலலிதாவை இந்தியா முழுதும் எடுத்து செல்ல விரும்புகிறோம். அவரை அ.தி.மு.க.,வினர் குறுகிய வட்டத்தில் வைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
மே 28, 2024 18:53

இந்தியாமுழுவதையும் தான் பிஜேபி மட்டும் ஆள வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பது தெரிகிறது.


kantharvan
மே 28, 2024 12:22

அன்புள்ள அக்கா ஜெயலலிதா எல்லோருக்குமானவர் என்பதுதானே பெரிய வட்டம் அவரை இந்துத்வவாதி என்று சொல்வது குறுகிய வட்டம் அல்லவா? மேலும் தான் உயிரோடு இருக்கும்வரை இனி எப்போதும் மதவாத பாஜகவுடன் உறவில்லை என்றவரை எப்படி நீங்கள் சிறுமை படுத்தலாம் பதில் சொல்வீர்களா ? நீங்கள் சொல்வீர்களா?


Subramanian
மே 28, 2024 08:24

அச்சுசெட் . பிஜேபி mechine


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை