உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

விநாயகர்சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வாபஸ்பெறப்பட்டது.திருச்சி பெரம்பலூர் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர்களின் சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்தது .இதனையடுத்து சுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறி்க்கையில்தெரிவித்து இருப்பதாவது: விநாயகர்சதுர்த்தி தொடர்பாக பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட சுற்றிக்கை சிலைசெய்வோர்கள் அமைப்பாளர்கள், பொதுமக்களுக்கானது . தவறான புரிதலின் பேரில் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் /உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.தவறான சுற்றறி்கை அனுப்பிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V Radha
செப் 06, 2024 11:46

இளம் தலைமுறையினறான மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை தெரிவிக்கும் போது அவர்கள் அதை தனது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இது போல நாலு பேருக்கு நன்மை தரும் விஷயங்களை மாணவர்கள் மூலம் பரப்புவதில் என்ன தவறு இருக்கிறது?


Bhaskaran
செப் 05, 2024 11:15

வீவீஈஈஈரமணி ஒப்பாரிக்கு பயந்துட்டாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை