உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி பெயர் இடம் பெறக்கூடாது; உயர் நீதிமன்றம்

கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி பெயர் இடம் பெறக்கூடாது; உயர் நீதிமன்றம்

மதுரை: 'கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது. நன்கொடையாளர்களின் பெயர்கள் தேவையற்றவை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நடுவிக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் பல்வேறு சமூகத்தினரால் நிறுவப்பட்டது. பங்குனி திருவிழா ஏப்ரலில் நடைபெறும். இதற்கான அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களில் அந்தந்த ஜாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எங்கள் சமூக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. அதில், 'ஊரார்' என குறிப்பிட்டுள்ளதற்கு பதிலாக எங்கள் சமூக பெயரை அச்சிடும்படி அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர், கோவில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.திருவிழா நடத்துவதில் சமத்துவம், சமூக நீதியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அறநிலையத்துறை தரப்பு: திருவிழாவின் முதல் நாளில் குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் வழிபடுவர். 'ஊரார்' என்பது கிராமத்திலுள்ள மக்களை குறிக்கும் பொதுவான பெயர். குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிக்கவில்லை.எந்த ஒரு சமூகத்திடமும் பாரபட்சம் காட்டுவதும் இல்லை; ஒதுக்குவதும் இல்லை. பிற சமூக பிரதிநிதிகள் பாரம்பரியமாக அனைத்து கிராம மக்கள் சார்பில் முதல் நாள் திருவிழாவிற்கு நிதியுதவி செய்தனர். எனவே, அழைப்பிதழில் அவர்களின் சமூக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய ஜாதியினரும் வெவ்வேறு நாட்களில் மண்டகப்படி நடத்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகம் மட்டும் வெளிப்படையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிபடுவதற்கோ அல்லது திருவிழாவில் பங்கேற்பதற்கோ எந்த தடையும் இல்லை என, அறநிலையத் துறை தரப்பு வாதிடலாம்.சந்தேகத்திற்கு இடமின்றி அக்கருத்தை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; வெறுமனே அடையாளமாக இருக்கக்கூடாது.ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கி கோவில் திருவிழாக்களை கொண்டாட வேண்டும் என கருதுகிறோம்.அந்த வரையறை, குறிப்பிட்ட ஜாதியையும் உள்ளடக்கியது. கோவில் அழைப்பிதழில் குறிப்பிட்ட ஜாதி பெயர்களை நிதி உதவி அடிப்படையில் மட்டும் குறிப்பிடுவது தேவையற்றது.பங்குனி திருவிழா அழைப்பிதழில் நன்கொடையாளர்கள் அல்லது 'ஸ்பான்சர்'களின் பெயர்கள் தேவையற்றவை. வரும் காலங்களில் இக்கோவில் விழாக்களின் அழைப்பிதழில் பல்வேறு ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது. தேவைப்பட்டால், நன்கொடையாளர்களை பாராட்டி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் சான்று அனுப்பலாம்.பங்குனி திருவிழாவில் ஏதேனும் இடையூறு அல்லது சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், விழாவை சுமுகமாக நடத்த கலெக்டர், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ram pollachi
மார் 02, 2025 23:31

திருக்கோவில்களில் உண்டியல் வைக்க கூடாது என்று ஒரு உத்தரவு போடுங்கள், ஜாதி பாகுபாடு சார்ந்த வழக்குகள் படி ஏறாது!


Ram pollachi
மார் 02, 2025 23:12

ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம் என வாய்கிழிய பேசிய அரசியல்வாதிகளால் மேல்தட்டு, நடுத்தர வசதியான, வசதியில்லாத இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் அவர்களின் வம்சம் அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டு உள்ளது இதற்கு என்ன பதில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என வழிபடும் வழக்கம் உண்டு, இந்து சமய அறநிலைய துறை வருமானம் அதிகம் வரும் இஷ்ட தெய்வ வழிபாட்டில் உள்ளே புகுந்து தன் இஷ்டம் போல் நடந்து கொள்கிறது இதற்கு தலைமை தாங்குவது யார் அவர்கள் ஜாதியை சொல்ல தயக்கம் ஏன்? கலப்பு திருமணத்தை ஊக்குவித்ததால் குல தெய்வங்கள் காணாமல் போய் கொண்டே உள்ளது... நாட்டு பசு, கலப்பின பசுவுக்கும் என்ன வித்தியாசம் அதனால் ஏற்படும் சாதகம், பாதகம் என்ன என்பது கூட தெரியாதா? விடை தெரிந்தவர்களால் பல கேள்வியை கேட்கமுடியும். வெறும் கேள்வி எழுப்பவர்களால் விடையை சொல்லவே முடியாது.


Ram pollachi
மார் 02, 2025 21:31

பொள்ளாச்சியில் உள்ள ஊர் பெயரை பார்க்கவும், ரெட்டியார் மடம், ரமணமுதலிபுதூர், நாயக்கன் பாளையம், நஞ்சேகவுண்டன் புதூர், குள்ளிசெட்டி பாளையம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எங்கே தொட்டாலும் இடிக்கும் எதையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும்.


Ram pollachi
மார் 02, 2025 15:32

ஜாதியை மட்டும் ஒழித்தால் போதாது குலதெய்வம், கோத்திரம் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்... ஜாதி அடிப்படையில் தொழில் செய்தவர்களிடம் ஒழுக்கம், பணிவு, நேர்மை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு இவற்றுக்கும் மேலாக தொழில் தர்மம் காப்பாற்றப்பட்டது. ஆனால் இன்று ஜாதியை ஒழிப்பதாக சொல்லி எல்லா கை தொழிலையும் நசுக்கி வேலை இல்லை என்ற நிலைக்கு தள்ளி விட்டார்கள்... நல்லது கெட்டதை எடுத்து சொல்ல வேண்டிய இந்துமத பெரியவர்கள் நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கியதால் அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.


Kannan
மார் 02, 2025 11:12

அப்படீன்னா தனித்தொகுதியையும் நீக்கி விடுங்கள் யுவர் ஆனர்....யார் வேணும்னாலும் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இட அனுமதிக்கவும்.


R.P.Anand
மார் 02, 2025 10:30

ஒதுக்கீடு உள்ள வரை ஜாதி ஒழிய வாய்ப்பில்லை


R.P.Anand
மார் 02, 2025 10:28

அப்போ ஜாதி ஒழிந்து விட்டதா ஆபீசர்


Barakat Ali
மார் 02, 2025 10:21

முதல் வகுப்பில் சேரும்போதே சாதி, மதம் கேட்குறாங்க ..... சாதி / மத அடிப்படையில் இடவொதுக்கீடு, தொகுதிகள் ஒதுக்குதல் இதையெல்லாம் செஞ்சுக்கிட்டு சாதியை ஒழிப்பாங்களாம் .....


ஜாதிமல்லி
மார் 02, 2025 09:36

பிரதமரே ஜாதிப் பேரோடுதான் உலா வர்ராரு கனம் கோர்ட்டாருக்கு தெரியுமா?


அப்பாவி
மார் 02, 2025 09:34

டி.வி ல வன்னியர் மாட்ரிமோனி, முதலியார் மேட்ரிமோனின்னு போட்டு டார்ச்சர் குடுக்கறாங்க. அவிங்களுக்கும் தடை போடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை