உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., விஜய்க்கு இனிதான் வேலையே! ஆனா... லிஸ்ட் பெரிசா இருக்கே!

த.வெ.க., விஜய்க்கு இனிதான் வேலையே! ஆனா... லிஸ்ட் பெரிசா இருக்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துவிட்ட நிலையில் அடுத்த அவர் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய பேச்சுகள் அரசியல் களத்தில் எழ ஆரம்பித்து இருக்கின்றன.

தேர்தல் ஆணையம்

கட்சி ஆரம்பிக்க போகிறேன், தேர்தலை சந்திக்கப்போகிறோம் என்று நடிகர் விஜய் அறிவித்த நாளில் இருந்த சந்தோஷத்தை விட இன்று அக்கட்சிக்கும், தொண்டர்களுக்கும் உத்வேக நாளாக அமைந்திருக்கிறது. த.வெ.க., இனி அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்த காவல்துறையும் 33 நிபந்தனைகளுடன் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5wcmcqw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அறிக்கை, பட்டியல்

அரசியல் கட்சி பதிவு, தேர்தல் ஆணையம் அறிவிப்பு, மாநாடு அனுமதி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தடைகளை தகர்த்து எறிந்து வலம் வருவோம் என்று விஜய்யின் அறிக்கை வெளியாக அவர் முன் தற்போதுள்ள சவால்கள் என்ன என்பது பற்றிய பேச்சுகள் பொதுவெளியில் பெரிய பட்டியலாக எழ ஆரம்பித்து உள்ளன.

கேள்விகள்

முதலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தான் அரசியல் விமர்சகர்களின் திடமான கேள்வியாக இருக்கிறது. அடிப்படையான கொள்கை என்ன? எந்த பொருளை வலிமையாக முன் வைத்து கட்சி நடத்தப்படும் என்பது கட்சி தொண்டர்களுக்கே இன்னும் பிடிபடாத விஷயமாக உள்ளது.

மொழி,மதம்

மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையிலும் விஜய்யின் பார்வை, அதில் அவரின் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்பதை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.கட்சி தலைவர் என்றால், சமகால பிரச்னைகள், காலம் காலமாக உள்ள பிரச்னைகள் குறிப்பாக மொழி, மதம் மற்றும் சாதி சார்ந்தவை, கச்சத்தீவு விவகாரம், குடும்ப அரசியல், ஊழலுக்கான எதிரான நிலைப்பாடு, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோலிய பொருள் விலையேற்றம், எய்ம்ஸ், ஜி.எஸ்.டி., நதிநீர் பிரச்னைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றில் பலப்பல கேள்விகளை விஜய் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்காக ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருக்கும்.

திராவிட எதிர்ப்பு அரசியல்

இன்னமும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாராக உள்ளது. இந்த காலகட்டத்தில் விஜய் செய்யும் அரசியல், திராவிட கட்சிகளுக்கு எதிராக இருக்குமா? அல்லது அவர்களின் இருப்பை சார்ந்தே தமது திட்டத்தையும் வகுத்துக் கொள்வாரா? த.வெ.க., தமிழக அரசியல் களத்தில் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

கூட்டணி

தாம் களத்தில் இருக்கும் திரைத்துறையில் அவரது பங்களிப்பு, அங்குள்ள பிரச்னைகளை அவர் அணுகி தீர்வு காண்பாரா? அரசியலில் தனி ஆவர்த்தனமா? அல்லது கூட்டணியா? எனவும் கேள்விகளை பலரும் முன் வைக்கின்றனர்.

எதிர்வினை எப்படி இருக்கும்

கட்சியில் நிர்வாகிகள் என யாரை, எப்படி நியமிக்கப்போகிறார்? கோஷ்டி பூசல் வந்தால், மாற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்? சமூக அவலங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு நேரில் வந்து குரல் கொடுப்பாரா? அல்லது அறிக்கை அரசியல் தானா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி தள்ளுகின்றனர். விஜய் முன் உண்மையாகவே ஆயிரம் ஆயிரம் கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் லைன் கட்டி நிற்கின்றன.

மாநாடு உரை

கட்சி ஆரம்பிப்பது கடினமல்ல, அதை நடத்துவதில் தான் இருக்கிறது சூட்சுமம். அனைத்திலும் விஜய் என்பவர் த.வெ.க., தலைவராக பரிமளிப்பாரா அல்லது நடிகராக காட்சி தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். அனைத்திற்கும் மாநாட்டின் முதல் உரையில் நடிகர் விஜய்யிடம் பதில் இருக்கும் என்பது தான் த.வெ.க., தொண்டர்கள் எதிர்பார்ப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mr Krish Tamilnadu
செப் 08, 2024 22:11

பூத் வேலை என ஒரு விசயம் உள்ளது. அதில் தான் மற்ற கட்சிகள் தோற்று விடுகின்றன. பூத் ஏஜெண்ட், ஒரு நாள் முழுக்க அங்கு இருப்பது என வாக்காளர்கள், அந்த ஏஜெண்ட்களை பார்த்து மற்ற கட்சிகளை மறந்து விடுகிறார்கள். முதலில் பூத் ஏஜெண்ட் வேலையே நிறுத்த வேண்டும். வாக்காளர்களை உறுதிபடுத்த ஆதார் இருக்கிறது. பூத் நடவடிக்கை, கேமரா மூலம் கண்காணிக்க படுகிறது. பிறகு எதற்கு பூத் ஏஜெண்ட்?. அனைவரையும் வாக்கு சாவடிக்கு வெளியேவே நிறுத்த வேண்டும். அப்போது தான் தேர்தல் உருப்படும்.


SP
செப் 08, 2024 21:06

திமுக எதிர்ப்பு வாக்குகளைத்தான் பிரிப்பார் மீண்டும் திமுக ஆட்சிதான்.


Easwar Kamal
செப் 08, 2024 18:53

விஜய்க்கே டெபாசிட் தெருமனு சந்தேகம். இதுல வீணாப்போன ரசிகர் மன்றம் கண்மணிகள் வேற. இவனுங்கல் எலாம் சினிமா sambaidcha இவனுங்களுக்கு பிரியாணி / டாஸ்க் மார்க் வாங்கி கொடுத்தே அழிச்சுரும். சினிமா நடிகனுங்களுக்கு என்ன ப்ரிச்சனை என்றல் இன்றைக்கு தேர்தல் நின்னு nalaykae CM aiyudanum. பொறுமை கிடையாது. araisyal பொறுமை ரொம்ப முக்கியம். சினிமா மாதிரி 6 மாசம் நடிச்சு 500 கோடி லாபம் எல்லாம் பார்க்கிற மாதிரி அவ்வளவு ஈஸி கிடையாது. விஜய் இந்த அரசியல் thallivathade இவன் அப்பன் தன. அப்பன்காரன் இவனை விட பெர்சக்கரண். நல்ல சூழநியைல் இருக்கும்போது எடுத்து குறி இருந்தால் விஜய் கொஞ்சம் கேட்டு இருக்கலாம்.


T.sthivinayagam
செப் 08, 2024 18:46

வெற்றி மலரான வாகை மலர் மலர தொடங்கிவிட்டது.


g.kumaresan
செப் 08, 2024 18:32

joker


Ms Mahadevan Mahadevan
செப் 08, 2024 17:49

விஜய் மற்ற கட்சிகளின் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு , மதுவிலக்கு, இலவசங்கள் இல்லாமை, கையூட்டு அரசு அலுவலங்களில் இல்லாமை சம வாய்ப்பு சம உரிமை இவைகளை தன் கட்சி கொள்கை என்று சொன்னால் கட்சி ஆரமிப்களாம் . இல்லை என்றால் பதவி சுகத்திருக்கு ஆரம்பிக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்


சமூக நல விரும்பி
செப் 08, 2024 16:30

இப்போது உலக நாடுகள் மற்றும் இலங்கை மேலும் இந்தியாவில் கேரளா போல பல மாநிலங்கள் இலவசங்களை கொடுத்து இப்போது நி நெருக்கடியில் தள்ளாடுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு மாநிலத்தை தனி ஒரு கட்சி வழி நடுத்துவது முடியாத காரியம். முக்கியமாக மத்திய அரசு உதவி இல்லாமல் எதையும் எளிதில் சமாளிக்க முடியாது. அதனால் விஜய் நிபுணர்கள் உதவியுடன் தான் எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்யா விட்டால் விஜய் அதள பாதாளத்தில் சறுக்கி விடுவார்.


God yes Godyes
செப் 08, 2024 16:06

இதுவரை ஆட்சி பிடித்து மங்களம் பாடிவரும் தெனாவெட்டூ கட்சிக்கு விஜய் வைக்க


Gurusamy
செப் 08, 2024 14:22

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை?


vinay
செப் 08, 2024 14:17

இவன் கட்சி சார்பில் வைக்க பட்டிருக்கும் பேனர்களில் உள்ள முகங்களை பார்க்கும் போதே கட்சி லட்சணம் தெரிகிறது...பெரும்பாலும் 2K புள்ளிங்கோக்களை நம்பி ஒரு கட்சியாம் அதற்கு ஒரு தலைவராம்... விளங்கிடும்


முக்கிய வீடியோ