உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி, குமரி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, குமரி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் இன்று(ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று(ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 1 - 2 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ