உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: பயண நேரம் குறையும்

சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: பயண நேரம் குறையும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல ஆண்டுகளாக நடந்து வந்த சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்து, இறுதிக்கட்ட சோதனை நடந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் போது, தென்மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம், 45 நிமிடங்கள் வரை குறையும். கூடுதல் ரயில்களையும் இயக்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் பிரதானமான ரயில்வே கனவு திட்டமான, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகளை, 2022 மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்களால், இந்த திட்டப்பணிகள் தாமதமாகின.இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழு வேகம் பெற்றன. திருநெல்வேலி - நாகர்கோவில் இடையிலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது, நாகர்கோவில் - கன்னியாகுமரி வரையிலான இரட்டை பாதை பணிகளும் முடிந்து, இறுதிகட்ட சோதனை பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தில், தற்போது கன்னியாகுமரி வரை பணிகள் முடிந்துள்ளன. அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களை, படிப்படியாக இரட்டை பாதைகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் 45 நிமிடங்கள் வரை குறையும். ரயில்களின் வேகத்தையும், 130 கி.மீ., வரை அதிகரிக்க முடியும். மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் வரை அதிகரிக்கவும் முடியும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஏப் 06, 2024 17:44

மும்பை அகமதாபாத் இடையில் புதிய புல்லட் ரயில் பாதை பத்து வருடங்களில் அமைக்கும் மத்திய அரசின் ரயில்வே துறைக்கு சென்னை கன்னியாகுமரி இடையே ஏற்கனவே இருந்த ஒற்றை வழிப்பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றி அமைக்க இருபத்தைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது தமிழகத்தின் மீதுள்ள பாரபட்சத்தை காண்பிக்கிறது!


venugopal s
ஏப் 06, 2024 16:42

இதை முடிக்க இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்ட மத்திய அரசின் ரயில்வே துறையை வன்மையாக கண்டிக்கிறேன்!


veeratamilan
ஏப் 06, 2024 12:43

இப்போது ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது இப்போது ரயில் பாதை வரும் போது கூடுதல் ரயில் இயக்கப்படும்


Arul
ஏப் 06, 2024 10:05

, ஒரு திட்டம் முடிவுபெற இருபத்தஞ்சி வருஷம் இதுல என்ன மண்ணாங்கட்டி பெருமை


Nagercoil Suresh
ஏப் 06, 2024 09:22

காலங்கள் கடந்து வந்தாலும் பரவாயில்லை இது மிகவும் வரவேற்பிற்குரிய திட்டம், தென் தமிழக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சென்னை டு நாகர்கோயில் பயண நேரம் ஆறு மணி நேரமாக குறைந்தால் பொது மக்களுக்கு மிகுந்த வசதியாக அமையும் ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்களின் நிலை தான் ஏப்படி பார்த்தாலும் எலக்ட்ரிக் வாகனங்களால் தற்போதய வாகனங்களை முழுவதுமாக மாத்தி அமைக்க முடியாதோ அதே போல இரட்டுமே பயனுள்ளதாக இருக்கும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 06, 2024 09:17

வெறும் ரயில் பாதைகளால் பயன் இல்லை இன்னும் தேவையான அளவுக்குக்கூட ரயில்களை இயக்கவில்லை என்பதே உண்மை தென் மாவட்ட மக்கள் ஒவ்வொருமுறையும் சொந்த ஊருக்கு சென்று திரும்புவது ஒரு பெரிய சவாலான செயலாக இருக்கிறது காரணம், போதிய ரயில்களை இயக்காமல், எந்த ரயில்களிலும் இடம் கிடைப்பதில்லை ஆனால், அரசியல்வாதிகளின் பினாமிகள் மூலம் ஆம்னி பேருந்துகள் மட்டும் நாளுக்கு நாள் கட்டணங்களை ஏற்றி வருகிறார்கள் நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலுக்கு பெருமளவிற்கு செலவிடப்படுகிறது


ராமன்
ஏப் 06, 2024 07:35

விழுப்புரம் தஞ்சாவூர் மட்டுமே புறக்கணிக்கப் படுவது ஏனோ!!


J.V. Iyer
ஏப் 06, 2024 06:13

பாஜக அரசுதான் தமிழகத்திற்கு என்னவெல்லாம் செய்கிறது தமிழ் மக்களுக்கு நன்றி உணர்ச்சி உள்ளதா? இருந்தால் இந்த தேர்தலில் காண்பியுங்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை