உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

ராணுவ ஓய்வூதியர் குறைதீர் மையமாக சென்னை தேர்வு

சென்னை:ராணுவ அமைச்சகத்தின் குடும்ப ஓய்வூதிய குறைதீர் தலைமையிடமாக, சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களின் குடும்ப குறைதீர் மையம், மும்பை மற்றும் அலகாபாதில் செயல்பட்டு வந்தது. தற்போது, ஓய்வூதிய குறைதீர் தலைமையிடமாக, சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்காளர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.சென்னையில் கடந்த 10 நாள்களில், 1,891 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 1,034 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குறைதீர் சிறப்பு முகாம் இம்மாதம் முழுதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூலை 10, 2024 02:14

ராணுவ அமைச்சகத்தின் குடும்ப ஓய்வூதிய குறைதீர் தலைமையிடமாக, சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நல்ல செய்தி ஆனால் இதே போன்று பொதுத்துறை வங்கிளிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு சரியான ஓய்வு ஊதியம் வழங்கப்படாமல் அப்டேஷனும் பல வருடங்களாக செய்யாமல் இருப்பதை மத்திய அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை-இருபது வருடங்களாக ஒரே அடிப்படை ஓய்வுஊதியம்தான் உள்ளது சிறிதுகூட மாற்றமே இல்லை


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி