உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறமையை கண்டு செஸ் உலகமே வியந்து நிற்கிறது: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திறமையை கண்டு செஸ் உலகமே வியந்து நிற்கிறது: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் இரண்டு வீரர்களான கார்ல்சன், பேபியானோ கருனாவை வென்ற, செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.உலகின் நம்பர் 1 மற்றும் 2ம் இடத்தில் இருக்கும் வீரர்களை அடுத்தடுத்து தோற்கடித்து டாப் 10 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை இளம் வீரர் பிரக்ஞானந்தா வெளிப்படுத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=73prw7zd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03ம் சுற்றில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில், உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும். பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Mani . V
ஜூன் 03, 2024 04:12

எங்கே, அந்தப் பையன் பேரை ஒருக்கா ஒழுங்கா சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.


subramanian
ஜூன் 02, 2024 23:19

யாரப்பா அது. செஸ் சனாதன தர்மம். பிரதமர் அதை பாராட்டி உள்ளார். சதுரங்க வல்லபேஸ்வரர் கோயில் தமிழகத்தில் உள்ளது என்று எழுதி கொடுத்தால் ஸ்டாலின் தலை தெறிக்க ஓடுவார்.


subramanian
ஜூன் 02, 2024 23:15

இது ஜுன் நாலு ஜுரம். ஐந்தாம் தேதி சரியாகிவிடும். அப்புறம் ஒரே புலம்பல்.


Jai
ஜூன் 02, 2024 20:20

முதலில் உங்கள் தொலைக்காட்சிகளில் திருநீறை அழிக்காமல் பிரக்ஞானவை காண்பியுங்கள். மக்கள் உங்களின் இந்து விரோத செயல்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்மார்ட் போன்கள் வந்தபிறகு மக்களின் சிநித்க்கும் திறன் அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப மாற்றிகொள்ளவிட்டால் காங்கிரஸ் நிலைமைதான் உங்களுக்கு


va.sri.nrusimaan
ஜூன் 02, 2024 20:00

bcz of state sports minister


Barakat Ali
ஜூன் 02, 2024 17:32

திருநீற்றை அழிக்காத பிரக்ஞானந்தா .....


சிந்தனை
ஜூன் 02, 2024 15:27

குருட்டுத் திருடுட்டுப் பூனை என்னமோ திடீர்னு உளறுது... இத்தனை வருஷம் கழிச்சு... என்ன தேவையோ பாவம்....


Duruvesan
ஜூன் 02, 2024 15:27

மோடி சார் நாப்பது சீட் எங்களையும் சேர்த்துக்குங்க. இனி ஹிந்து அந்த மகன், சனாதனம் ஒழிப்பு எல்லாம் பேச மாட்டோம். ரெண்டு மினிட்ர் குடுங்க போதும். நீங்க எது சொன்னாலும் ஓகே,


ஆரூர் ரங்
ஜூன் 02, 2024 14:16

பாரதி திருவள்ளுவர் வள்ளலார் நெற்றி விபூதியை அழித்து மகிழ்ந்தது திராவிஷம். இப்போ பிரக்ஞாவின் விபூதி முழுமனதுடன் பாராட்டத் தயங்க வைக்கிறது?


sridhar
ஜூன் 02, 2024 14:13

நல்லா பாருங்க , நெத்தியில விபூதி இருக்கு. .. அவரை பாராட்டி minority மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீங்க


மேலும் செய்திகள்