உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 'மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் ' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராகவும், ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி, மத்திய அரசை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்மொழி கல்விக் கொள்கையின் மீது அச்சுறுத்தல் போன்ற மாயையை பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீரற்ற கல்வி முறையை தடுப்பதற்காக, பா.ஜ.,வினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நாம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர். எத்தனையோ தடைகள் இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ., கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடுவீடாகச் சென்று மும்மொழி கல்விக் கொள்கை குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூட தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக எந்த மொழி விருப்பமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 16வது திருத்தமான, பிரிவினை எதிர்ப்பு மசோதா, உங்கள் கட்சியின் பிரிவினைவாத கருத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். இந்த மசோதா, இன்று நீங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதிய கல்விக்கொள்கையில் பெரும்பாலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக உங்களின் பகுதிநேர கல்வித்துறை அமைச்சர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று நீங்கள் புதிய கல்விக்கொள்கையை விஷம் என்று கூறுகிறீர்கள். உண்மையில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Guna Gkrv
மார் 07, 2025 15:09

அண்ணாமலை எதாவது உருப்படியான காரியம் உன்னால் செய்யமுடியுமா? சும்மா ஏன் கத்துகிறாய் வால் அருந்த பல்லி மாதிரி சும்மா கத்தி என்ன அகா போகிறது, எதாஹியாவது உன்னால் சாதிக்க முடியுமா ? தள்ளி நின்னு காத்து வரட்டும்


spr
மார் 06, 2025 18:33

முதலில் ஏதாவது மூன்று மொழி கற்க வேண்டும் என்பார்கள் பின்னர் ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக இந்தியை முதன்மை மொழியாக்குவார்கள் பொதுவாக திமுகவை ஆதரிக்காதவர்கள் கூட இந்தித் திணிப்பை எதிர்த்தாக வேண்டும் விருப்பம் உள்ளவர்கள் இந்தி என்ன எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கட்டும்.நமக்கு மாநில ஆட்சி மொழியாகத் தமிழும் இந்திய மற்றும் உலக கருத்துக் பரிமாற்றத்திற்கான மொழியாக ஆங்கிலமும் இருந்தால் போதும் எத்தனையோ விஷயங்களை ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் ஆங்கிலமும் அதில் ஒன்றாக இருக்கட்டும் பரவாயில்லை.


சுராகோ
மார் 06, 2025 21:15

மற்ற எல்லா மாநிலத்திலேயும் எல்லா மொழியையும் அழித்துவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?


Rajkumar Ramamoorthy
மார் 06, 2025 17:51

இந்த திருட்டு திராவிட கும்பல் கிட்ட இருந்து தமிழ் நாடு தப்பிக்கணும். மூன்றாவது மொழி வந்தால் தமிழ் போய்விடும் என்பது வோட்டுக்கு செய்யும் வேலை, கமிஷன் அடித்து கொண்டே சாகரத்துக்கு பிளான்.


Gokul Krishnan
மார் 06, 2025 17:40

தனது உண்மை பெயரை பதிவு செய்ய வக்கு இல்லாத எஸ் யுவர் கோனார் அதி மேதாவி நான் இரு நூறு ரூபாய்க்கு கருதி பதிவு செய்ததாக கூறுகிறார் நான் இரு நூறு ரூபாய்க்கு வாங்கி கருத்து பதிவு செய்ததை நிரூபிக்க தயாரா நான் பிஜேபி கும் சொம்பு தூக்க வில்லை தி மு கவிற்கும் சொம்பு தூக்கவில்லை எனது கேள்வியை சந்தேகத்தை பதிவு செய்தால் அதை தெளிவாக விளக்கவும் இல்லை என்றால் மூடி கொண்டு செல்லவும்


guna
மார் 06, 2025 17:55

வைகுந்தருகு பல பெயர்கள்...பல அவதாரங்கள்....


Velan Iyengaar
மார் 06, 2025 16:04

+2 வில் கணக்கு படித்து பின்னர் கணக்கிலேயே மாஸ்டர் படிப்பு படித்துவிட்டு ஒரு ஐந்து வருடம் கழித்து கணக்குக்கு சம்பந்தம் இல்லாத வேலை செய்துகொண்டு இருக்கும் ஆளிடம் அதே +2 வில் படித்த Integeration மற்றும் Diffrentiation சூத்திரங்களை கேட்டால் அந்த ஆளே தடுமாறிவிடுவான் ....இப்போ இதில் மூன்றாவது மொழியாம் ... அதுக்கு பணமாம் ... அந்த பணத்தை தரமாட்டானாம் .... இவன் என்னவோ இவன் அப்பன் வீட்டினுள்ளில் இருந்து பணத்தை தருவது போல நினைப்பு ....


Mettai* Tamil
மார் 06, 2025 16:58

முதலில் இந்த கதையெல்லாம் அரசு உதவி பெரும் பள்ளியில் உருது ,அரபி சொல்லிக்கொடுப்பதையும் அப்புறம் CBSE ஸ்கூல் நடத்துற உங்க கட்சிக்காரங்க கிட்ட மூன்றாவது மொழி வேண்டாம் என சொல்லியும் அரசு பள்ளி போல சமசீர் கல்வி ஆக்குங்க .அப்புறம் யார் அப்பன் வீட்டு பணமோ பொணமோ கரெக்டான விளக்கம் கொடுத்தால் தான் அவர்களும் கொடுப்பாங்க .செய்யாத திட்டத்துக்கு எப்படி பணம் கொடுப்பாங்க ..அந்த Integeration மற்றும் Diffrentiation சூத்திரங்களை use பண்ணதானே .1967 லே விஞ்ஞானத்தை கரைச்சு குடிச்சவங்கதானே ...


Kasimani Baskaran
மார் 06, 2025 17:13

கவுன்சிலர் ஆடிக்காரில் வரும் பொழுது ஏன் படிக்க வேண்டும். தேவையில்லை. இதுதான் திராவிட லாஜிக்.


Kumar Kumzi
மார் 06, 2025 17:55

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய கொத்தடிமை ஓங்கோல் துண்டுசீட்டு குடுக்குற முட்டு அப்பப்பா சூப்பரோ சூப்பர் ..


K.n. Dhasarathan
மார் 06, 2025 15:58

அண்ணாமலை பிரமாதமாக உருட்டுகிறீர்கள், ஹிந்தி திணிப்பு வேறு, மும்மொழி கொள்கை வேறு, இரண்டையும் ஒன்றாக பேச வேண்டாம், ஆச்சா ஹிந்தியை யாரும் எதிர்க்கவில்லை இது ஏன் உங்களை போன்றோர் மரமண்டையில் ஏற வில்லை, ஹிந்தி பிரச்சார சபை உள்பட பல கல்வி நிலையங்கள், மாநில அரசின் உதவியோடும், ஒத்துழைப்போடும் நன்றாக நடக்கின்றன, ஆச்சா இப்போ வானொலி நிலையம் மற்றும் பொதிகை டீ.வி. நிலையங்கள் பெயர் மற்றம் ஏன் ?, ஹிந்தி திணிப்பு, புரிந்ததா என்னத்த


Kasimani Baskaran
மார் 06, 2025 17:15

பிறகு எதற்கு அரசு பள்ளியில் மூன்றாவது மொழி இல்லை? படிக்காத பக்கிகள் சமச்சீர் என்ற ஒரு தரித்திரத்தை தலையில் கட்டி தமிழனை குழிதோண்டி புதைக்க செய்த ஏற்பாடு. பகுத்தறிவு மட்டுமல்ல அறிவே இல்லாத கருத்து.


Sampath Kumar
மார் 06, 2025 15:56

கர்ப்பிணி எல்லாம் கிடையாது ஆடு குட்டி உன்னக்கு வேடுமானால் அது கற்பனையாக இருக்கும் இங்கே நடக்கும் சதி பற்றி ஒரு மண்ணும் உன்னக்கு தெரியாது போவியா


Kumar Kumzi
மார் 06, 2025 17:59

இன்பநிதிக்கும் போஸ்டர் ஒட்டுவேன்னு அடம் புடிக்குறான்யா ..


Kanda kumar
மார் 06, 2025 15:23

தின மலரின் கவனத்திற்கு, பக்கத்துக்கு மாநில முதல்வர் சந்திர பாபு நாய்டு தான் மாநில மாணவர்களை 10 மொழி கற்பதற்கு தயார் படுத்தி கொண்டுள்ளதாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. நாளை இதையே தலைப்பு செய்தியாக போட்டால் தமிழக மாணவர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். நன்றி.


ES
மார் 06, 2025 15:15

why other states need to suffer if they can't speak our language? I will get insulted instead of getting a proper reply now


vivek
மார் 06, 2025 17:06

ES ...why only English...you don't know Tamil.... தமிழ் தெரியாதா ?Big insult for you.....


Velan Iyengaar
மார் 06, 2025 15:08

எந்தவிதமான அறிவியல்பூர்வ தரவுகளை கொண்டு மும்மொழி மாணவர்களுக்கு நல்லது என்று கண்டுபிடித்தனர் ?? மும்மொழி பயில்வது மாணவர்களின் பிற முக்கிய பாடங்களின் கற்றலை சீர்கெடுக்காதா ?? விருப்படி படித்து தேர்வு அடைவதை இந்த மாநிலம் தடுக்கிறதா ?? மூன்றாவது மொழி மதிப்பெண் மாணவர்களின் மொத்த மதிப்பெண்ணில் ஏற்கப்படுமா இல்லையா ?? மூன்றாவது மொழி என்ற பெயரில் சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்றாவது மொழிகளை படிக்கும் மாணவர்களுக்கும் ஹிந்தி எழுத்துக்களையே மறுபடி சமஸ்க்ரிதம் என்ற பெயரில் படிக்கும் மாணவர்களுக்கும் எந்தவித்தில் சமநிலை உள்ளதா ?? இதில் மூன்றாவது மொழி கட்டாயத்தின் பேரில் படிக்கும் யாருக்காவது எதாவது ஆதாயம் உள்ளதா ?? எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாவிடின் மறந்துவிடுவார்களா இல்லையா ?? பள்ளி படிப்புக்கு அப்புறம் ஒரு ஐந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்களுக்கு அந்த மூன்றாவது மொழி புழக்கத்தில் இல்லாமல் போனால் பத்து ஆண்டுக்கு பிறகு அந்த மூன்றாவது மொழி படித்தது எதாவது உபயோகப்படுமா ?? மூன்றாவது மொழி என்ற பெயரில் எப்படியாவது ஹிந்தியை புழக்கத்தில் கொண்டுவருவது தான் இவர்களின் மறைமுக நோக்கமா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை