உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபரிடம் விசாரணை

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபரிடம் விசாரணை

விருத்தாசலம்: சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது. அதில், முன்பதிவு பயண பெட்டியில் பயணம் செய்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம், அதே பெட்டியில் பயணம் செய்த கேரள மாநில வாலிபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். அதனை கண்டித்த இளம் பெண்ணிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அவரது புகாரின் பேரில், ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கேரள வாலிபரை பிடித்து, விருத்தாசலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி