உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பொய் சொல்லக்கூடாது: அண்ணாமலை

முதல்வர் பொய் சொல்லக்கூடாது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர், பிரதமர் மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

பிரதமர் மோடி, ஒடிசாவில் பிரசாரம் செய்த போது, தமிழகர்களை அவமதித்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் பொய் கூறியுள்ளார். ஸ்டாலின் சரியாக படிப்பதில்லை. இந்தியாவை ஆள ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.தமிழக முதல்வராக வரும் நபர், தமிழனாக இருக்க வேண்டும். இதேபோல, ஒவ்வொரு மாநில மக்களும் விரும்புகின்றனர்.ஒடிசா மாநிலத்தில், பிஜு ஜன தளத்தின் நவீன் பட்நாயக், 25 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். அவருக்கு, 12 ஆண்டுகளாக தனி செயலராக இருப்பவர் வி.கே.பாண்டியன். அவர், தமிழகத்தை சேர்ந்தவர்.சமீபத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிஜு ஜனதா தளத்தில் இணைந்து, தேர்தல் பிரசார முகமாக பாண்டியன் உள்ளார். பாண்டியன் சொல்வதை தான் நவீன் பட்நாயக் கேட்கிறார். தனக்கு பிடித்தமான வேறு மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் சேர்ந்தால், அவரை தி.மு.க.,வின் முகம் என்று ஸ்டாலின் சொல்வாரா?பிரதமர் மோடி பேசியிருப்பது, 'புரி ஜெகன்னாத ஆலயத்தின் சாவி காணாமல் போய் விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர்' என்றார். தமிழகத்தில் மண்ணின் மைந்தர் என்று பேசும் போது, ஒடிசாவில் தனி நியாயமா?பிரதமர் மோடி, 'ஒடிசா மக்களுக்கு முன்னுரிமை தராமல், வேறு மாநிலத்தில் இருந்து ஒருவர் உள்ளார்; நாங்கள் ஒடிசாவில் பிறந்த ஒருவரை ஒடிசா முதல்வராக்குவோம்' என, பேசியுள்ளார்.ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மீது அவர் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Krishnamoorthy Perumal
மே 25, 2024 22:14

தெலுங்கர்களும் & மலையாளியும் தமிழ்நாட்டை ஆண்டனர். தமிழன் ஏன் ஒடிசாவை ஆளக்கூடாது.


Krishnamoorthy Perumal
மே 25, 2024 22:10

தமிழ்நாட்டை தெலுங்கர்களான கருணாநிதி & ஸ்டாலின் மற்றும் மலையாளி எம் ஜி ஆர் ஆண்டனர். எனவே தமிழன் ஒடிசாவில் ஆள தகுதி உள்ளவனே.


Mohan
மே 25, 2024 07:58

பேசுகிறார்கள் என்ன சொல்ல


Ayyavu Uthirasamy
மே 23, 2024 19:23

ஏன், பாண்டியன் பற்றி நேரடியாக பேச " மோடிக்கு பயமா? அதை நேரடியாக பேசுவதை விட்டுவிட்டு சுற்றி வளைத்து சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்று சொன்னால், தமிழன் சாவியை திருடி விட்டான் என்றுதானே அர்த்தம்?


Mariadoss E
மே 23, 2024 18:26

மக்கள் முடிவு செய்யட்டும் யார் தங்கள் தலைவர் என்றுஇது மக்கள் ஆட்சி


MADHAVAN
மே 23, 2024 16:51

பொய் பேசுவதை மொத்த குத்தகைக்கு எடுத்தது


R.RAMACHANDRAN
மே 23, 2024 07:30

நவீன் பட்நாயக் ப ஜ க உடன் கூட்டணி வைத்திருந்தால் போற்றி புகழ்ந்திருப்பர்


ThamizhMagan
மே 22, 2024 22:14

உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன். முதல்வர் பொய் சொல்லக்கூடாது. அது போல் பிரதமரும் அறவே பொய் சொல்லக்கூடாது அண்ணாமலை ஒப்புக்கொள்வாரா? பின்னர் ஏன் பிரதமரை மட்டும் சுட்டிக்காட்டுவதில்லை?


Swaminathan Nath
மே 22, 2024 15:39

ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பிரதமர் மீது அவர் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதுmgr, ஜெயலலிதா, இருவரையும் மலையாளி, கன்னட காரன் என வசை பாடினார்கள், மோடி தமிழர்கள் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை, பாண்டியனிடம் சாவி இருக்கு என சொன்னார், ஏன் ரஜினி அரசியலுக்கு வரும் போது இங்குள்ள கட்சிகள் அவரை கன்னடன் என சொல்ல வில்லையா????


venugopal s
மே 22, 2024 13:19

அந்த உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளதோ!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை