உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகள்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6buglunl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=01. தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?3. பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Dharmavaan
ஏப் 02, 2024 20:41

மோடி செய்வது அயோகியதனம் இவர்களுடைய சலுகைகளை குறைப்பாங்களா


spr
ஏப் 02, 2024 17:47

எங்களிடம் கூட மூன்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் இருக்கு ஆனாலும் இந்த மூன்றுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதை மருந்து நடமாட்டத்தை மத்திய அரசு துறைகள் கண்டுபிடிக்குமுன் நீங்கள் கண்டுபிடிக்காதது எதனால் ? ஒரு நீதிபதியின் முன், தானாகவே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னும், விசாரணைக் கைதியாக ஜெயில் வாசம் செய்பவரை இன்னமும் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பதன் காரணம் என்ன? குற்றம் செய்யவில்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஆளுநரைக் குறை சொல்வதன் காரணம் என்ன?


Bala Paddy
ஏப் 01, 2024 15:45

கவலை படாதீங்க குடும்பத்தோட திஹார் போக போறீங்க அங்க உக்காந்துட்டு மூணு என்ன முப்பது கேள்வி கேட்கலாம் நிறைய ரேடி பண்ணி வச்சிக்கோங்க


Raa
ஏப் 01, 2024 15:20

இதே தேஞ்சுபோன ரெகார்ட் பாட்டுதான் பாடிட்டு இருக்கார் யார் கேட்க்கிறார்கள் ரசிக்கிறார்கள் என்று தெரியவில்லை


Krishnan Santhanaraj
ஏப் 01, 2024 15:18

I welcome Tamilnadu CMs questions No single paisa investment from centre for the past years Our hard earned NLC wealth is invested in North, Sirkali power project is diverted to Orissa NLC Solar projects are invested in Gujarat and Rajasthan


Krishnamurthy Venkatesan
ஏப் 01, 2024 15:01

கேள்வியை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா? திருவிளையாடல் பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது ஒரு ரூபாய் வரிக்கு பைசாதான் கிடைக்கிறது என்ற உங்கள் வாதத்திற்க்கு இன்னும் எத்தனை முறைதான் பதில் சொல்வார்கள் பல அற்புதமான திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் இன்னும் பல திட்டங்கள் வர முடியாமல் இருக்கின்றன நீங்கள்தானே % வடிகால் வேலைகள் முடிந்துவிட்டன இனி சென்னைக்கு flood பாதிப்பு இல்லை என சொன்னீர்கள் தேர்தல் வந்தால்தான் ரோடு போடுகிறார்கள் மாநில தேர்தல் வரும்போது நிதி நிலைமைகளை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி இலவச அறிவிப்புகளை அள்ளி விடுகிறார்கள் வெற்றி பெற்றதும் நாங்கள் அறிவித்த இலவசங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை என சொல்கிறார்கள்


மோகனசுந்தரம்
ஏப் 01, 2024 14:08

உன்ன மாதிரி கூமுட்டைகள் கேட்கும் கேள்விகளுக்கு பிரதம மந்திரி பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நீ உத்தமனும் இல்ல யோக்கிய சிகாமணியும் அல்ல.


Raj Kamal
ஏப் 01, 2024 16:02

இங்கு கேள்வி


Rengaraj
ஏப் 01, 2024 14:01

முதல்வர் அவர்களே உங்கள் மூணு கேள்விக்கும் பதில் இதோ ஒன்று: நீங்கள் பிரதமர் அவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ அனைத்தையும் பார்த்தாக வேண்டும் அதிலிருந்து தெரியும் எதற்க்காக அவர் உங்களோடு இருந்தார் என்று எந்த திட்டத்துக்கு நீங்கள் அவரோடு நின்றீர்கள் என்று இரண்டு: நிவாரணம் சம்பந்தமாக நீங்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்துக்கு கணக்கு தந்து விட்டு பிறகு பிரதமரிடம் கேட்கலாம் மூன்று: அநீதி இழைக்கப்பட்டது என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள் ஜீஎஸ்டீ தொகையாக நீங்கள் மாத மாதம் வசூலித்த தொகையை பட்டியல் இட்டு உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் அதே போன்று அவர்கள் அதில் எவ்வளவு உங்களுக்கு மாத மாதம் கொடுத்திட்டார்கள் என்பதையும் பட்டியலிட வேண்டும் சும்மா பொத்தாம் பொதுவாக பைசா கணக்கு பேசக்கூடாது மக்களுக்கு எல்லாம் தெரியும் நாடகம் போடாதீர்கள்


karupanasamy
ஏப் 01, 2024 13:52

கச்சத்தீவை தாரைவார்த்த கயவர் கருணாநிதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பது ஏன்?


Mohan
ஏப் 01, 2024 13:32

போன நாலாயிரம் கோடி என்னாச்சு எங்க ஊர்ல கோவை வர்ற வரி எல்லாம் சிங்கார அந்த நாத்தம் புடுச்சி சென்னைக்கே கொட்டுறிங்க எங்க ஊருக்கு நீங்க என்ன பண்ணீங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி