உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் இலக்கு!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் இலக்கு!

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வுக்கு வெற்றி கிடைக்காதது வருத்தம் தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைய எதுவுமில்லை. இந்த தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் பா.ம.க.,வுக்கு சாதகமாகவே இருக்கிறது. தேர்தல் முடிவுகளை வைத்து, இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. அதிகாரம், பண பலத்தை பயன்படுத்தியும், ஆளும் தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2019 தேர்தலை விட 6 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி, 2021 சட்டசபை தேர்தலை விட, 13 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று, மக்கள் விரும்புவதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.எனவே, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தகுதி, பா.ம.க.,வுக்கு உள்ளது. தமிழக அரசியலில் பா.ம.க., பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் மீண்டு வருவோம். 2026 சட்டசபை தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து, ஆட்சி அமைப்பதும் தான் ஒரே இலக்கு. - அன்புமணி,தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அரசு
ஜூன் 06, 2024 20:17

அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி, எவ்வளவு பெட்டி வாங்கலாம் என்று இப்போதே கணக்குப் போட ஆரம்பித்து விட்டார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை