உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வகுப்பறையில் மோதல்; தாக்கப்பட்ட மாணவன் பலி

வகுப்பறையில் மோதல்; தாக்கப்பட்ட மாணவன் பலி

எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ், 16, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவருக்கும், மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. இருவரும் வகுப்பறையில் தாக்கி கொண்டதில், ஆகாஷ் மயங்கினார்.பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு துாக்கி சென்றனர். அங்கிருந்து எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில், ஆகாஷ் இறந்தது தெரிந்தது.தன் செருப்பை மறைத்து வைத்தது தொடர்பாக, மாணவனை தட்டிக்கேட்டு ஆகாஷ் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. ஆகாஷை தாக்கிய மாணவனை பிடித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natchimuthu Chithiraisamy
ஆக 24, 2024 10:46

மிருகங்கள் சண்டையிடுவது இல்லை. மனிதர்கள் மிருகங்களை வளருங்கள். அதுவும் வாழட்டும். ஆகாஷ் ஆன்மா சாந்தியடையட்டும்.


rama adhavan
ஆக 24, 2024 04:40

ஆசிரியர் தான் மாணவனை அடிக்கக் கூடாது. அடித்தால் சஸ்பென்ஷன். வேலை காலி.மாணவன் சக மாணவனை அடிக்கலாம். இது தான் இன்றைய நடைமுறையோ?


Mani . V
ஆக 24, 2024 04:25

பேருந்தில் ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்படுவார்கள் என்று சொன்ன அரசு, இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கைது செய்யுமா? செய்யும். காரணம், இது இரும்புக்கை கோப்பால் அரசு.


புதிய வீடியோ