மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது
24-Aug-2024
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரோட்டோரத்தில் 25 க்கும் மேற்பட்ட நாட்டுவெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பட்டாசு கடை உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே செந்துறை ரோட்டில் உள்ளது கலைநகர். இப்பகுதி ரோட்டோர குடியிருப்பு பகுதி முட்புதரில் 25-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கேட்பாரற்று கிடந்தன.இதுகுறித்து அப்பகுதியினர் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மற்றும் போலீசார் சென்று நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.போலீஸ் விசாரணையில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகள் என்பதும், அப்பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர்கள் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து பட்டாசு கடை உரிமையாளர்கள் மதிவாணன் 32, மதன்குமார் 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
24-Aug-2024