உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ., நிர்வாகி வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழக பா.ஜ., நிர்வாகி வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:ரயிலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 6ல் தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, சென்னையில் இருந்து நெல்லைக்கு, 3 கோடி 98 லட்சத்து 91,500 ரூபாய் கொண்டு செல்ல இருந்ததை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., பிரமுகர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் உத்தரவிட்டனர்.அந்த வரிசையில், தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகனுக்கும், 'சம்மன்' அனுப்பினர்.அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசவவிநாயகன் மனு தாக்கல் செய்தார்.'வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. காரணமே இல்லாமல் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். கட்சியின் பெயருக்கும் என் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சம்மன் அனுப்பியுள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணை சட்ட விரோதமானது. எனவே, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் கூறியிருந்தார்.மனு, நீதிபதி சி.சரவணன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூன் மூன்றாவது வாரத்திற்கு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி