வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படியென்றால் மீதிப்பள்ளிகளில் சமச்சீர் பள்ளிகள் என்று போடுவது கூட தப்பில்லை.
சென்னை: பள்ளிகளின் பெயர்களில் உள்ள, 'மெட்ரிக்குலேஷன்' என்ற வார்த்தையை நீக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. உயர் நீதிமன்றத்தில், வேமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளிகளின் பெயர் உடன் சேர்த்து குறிப்பிட்டுள்ள மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். அதற்குப் பதில் தனியார் பள்ளி என்றே குறிப்பிட வேண்டும். இதுகுறித்து, 2019, 2021, 2023ம் ஆண்டுகளில் அனுப்பிய மனுவை பரிசீலிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.கணேசன், அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகினர்.முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. விதிகளுக்கு முரணாக இருந்தால் ஒழிய, குறிப்பிட்ட வகையில் கொள்கை முடிவு எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட முடியாது. 'நன்மை, தீமை என அனைத்து அம்சங்களையும், நிபுணர்கள் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே, மனுதாரர் தரப்பில் மனுக்கள் அனுப்பியுள்ளதால், அதை விரைந்து பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது' என கூறப்பட்டு உள்ளது.
அப்படியென்றால் மீதிப்பள்ளிகளில் சமச்சீர் பள்ளிகள் என்று போடுவது கூட தப்பில்லை.