| ADDED : ஜூலை 26, 2024 09:08 PM
திருவண்ணாமலை அருகிலுள்ள படவேடு ரேணுகாம்பாள், தன்னை நாடி வருவோரின் குறைகளைப் போக்கி நிம்மதி தருகிறாள். சுயம்பு வடிவில் தலையை மட்டும் அடையாளமாகக் கொண்ட இவள், பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் உடனிருக்க 'அனைத்திற்கும் ஆதாரம் நானே' என உணர்த்துகிறாள். ஜமதக்னி முனிவரின் மனைவியும், மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் தாயும் ஆக இருப்பவள் ரேணுகாம்பாள். இவளை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட புண்ணியம் சேரும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கம், ஜன ஆகர்ஷன சக்கரம் இங்கு உள்ளது. ஜமதக்னி முனிவர் ஆசிரமத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணே திருநீறாக தரப்படுகிறது. இதனால் பிணிகள் தீரும். தீயசக்தி அண்டாது. ஆடி வெள்ளியன்று திருவிழா நடக்கிறது. எப்படி செல்வது* போளூரில் இருந்து 23 கி.மீ.,* திருவண்ணாமலையில் இருந்து 61 கி.மீ.,நேரம் காலை 6:30 - 1:00 மணி மதியம் 3:00 - 8:30 மணிதொடர்புக்கு 94429 71595