உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அம்மன்-10: குழந்தைகளின் தெய்வம்

தினமும் அம்மன்-10: குழந்தைகளின் தெய்வம்

உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லையா... 'என்னிடம் வாருங்கள்; நிம்மதி தருகிறேன்' என்கிறாள் சென்னை மடிப்பாக்கம் சீதளாதேவி. குழந்தைகளுக்கு அரக்கன் ஜ்வராசுரனால் நோய்கள் பரவிய போது, 'சீதளா தேவியை வழிபடுங்கள்' என்றார் சிவபெருமான். அப்போது கழுதை வாகனத்தில் காட்சி தந்தாள் சீதளாதேவி. அவளின் கைகளில் கிண்ணம், விசிறி, துடைப்பம், தண்ணீர்ப் பானை இருந்தன. சீதளா என்றால் குளிர்விப்பவள். இவளுக்கு மாரி (மழைக்கடவுள்) கருணாமாயி (கருணை நிறைந்தவள்), மங்களா (நல்லவள்), பகவதி (தெய்வம்) என்றும் பெயருண்டு. பார்வதியின் அவதாரமான இவள் வடக்கு நோக்கியபடி இங்கு இருக்கிறாள். விநாயகர், முருகன், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன. எப்படி செல்வதுசென்னை வேளச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,நேரம் காலை 6:00 - 10:00 மணி மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு 98414 14174


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி