உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி: 10 கட்டளைகள் பிறப்பித்தது பதிவுத்துறை

பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி: 10 கட்டளைகள் பிறப்பித்தது பதிவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்: பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் - பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, 'ஸ்டார் 2.0 'மென்பொருளில், 'டிராப் டவுன் பாக்ஸ்' என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும் ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், ஒரு பத்திரம் நிலுவையில் வைக்கப்படும் நிகழ்வில், அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் பெறப்பட்டு இருக்க வேண்டும் நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும் பட்டாவின் உண்மை தன்மை சரிபார்ப்பு தேவைப்படும் நிகழ்வில், இணையதளம் வாயிலாக விபரங்களை சரிபார்த்து, பத்திரத்தை திருப்பித்தர வேண்டும் இணைய வழியில் பட்டா தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு கடிதம் எழுதி உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டும்; இது தொடர்பான கடிதப் போக்குவரத்து பிரதிகளை, ஆவணதாரருக்கும் அனுப்ப வேண்டும் முடக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ள பத்திரங்களில், மதிப்பு நிர்ணயம், கட்டட களப்பணி போன்ற பணிகளை, 15 நாட்களுக்குள் முடித்து மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும் முடக்கம் செய்ய வேண்டிய பத்திரம் தொடர்பான குறிப்புகள் வந்ததில் இருந்து, 15 நாட்களுக்குள், காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை, ஆவணதாரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் கடிதம் அனுப்பி, 15 நாட்களில் ஆவணதாரரிடம் இருந்து உரிய பதில் வராத நிலையில், அந்த ஆவணம் முடக்கப்பட்டதற்கான அறிவிப்பை பிறப்பிக்கலாம் இதில் உரிய நடைமுறைகளை பின்பற்றி, மூன்று மாதங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொறுப்பு நிலையில் உள்ள சார் -பதிவாளர், உதவியாளர்கள், முடக்க ஆவணம் குறித்த விபரங்களை காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.இந்த வழிமுறைகளை பின்பற்றாத சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R S BALA
ஏப் 05, 2024 08:23

அப்படியா? மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதாங்க


Dharmavaan
ஏப் 05, 2024 08:03

தாமதம்தான் ஊழல் பணம் இதுபோன்ற நேர கட்டுப்பாடு எல்லாம் அரசு வேலைக்கும் வரவேண்டும் இல்லையேல் தண்டனை என்று இருக்க வேண்டும் அப்போது கொஞ்சமாவது லஞ்சம் குறையும்


Kasimani Baskaran
ஏப் 05, 2024 05:35

ஏறாளமாக பணம் கொழிக்கும் துறை என்றால் அது பத்திரப்பதிவுத்துறைதான் எந்த நிலத்துக்காவது அதன் உண்மையான பரிவர்த்தனை தொகைக்கு பதிகிறார்கள் என்று கவனித்தால் இந்தத்துறை எவ்வளவு கறுப்புப்பணத்தை உருவாக்குகிறது என்பது புரியும் பத்தில் ஒரு பங்கு கூட காட்டப்படுவது இல்லை உண்மையான மதிப்பின்படி பதிவுசெய்தால் - கிடைக்கும் கட்டணத்தை வைத்து தமிழக அரசின் கடனை ஓராண்டில் கூட அடைத்து விட முடியும் அந்த அளவுக்கு பணம் விளையாடுகிறது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ