உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி ரயிலில் தீ

டில்லி ரயிலில் தீ

புதுடில்லி: ஜான்சி - டில்லி இடையே இயங்கும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில், சரிதா விஹார் அருகே துக்ளகாபாத் - ஓக்லா இடையே சென்றபோது, நேற்று மாலை 4:30 மணிக்கு டி - 3 மற்றும் டி - 4 பெட்டிகளில் தீப்பற்றியது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணியர் அலறியடித்து இறங்கி ஓடினர். இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பற்றி எரிந்த தீ, டி - 2 பெட்டிக்கு பரவியது.எட்டு வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் மூன்று பெட்டிகள் எரிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை