உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதன தர்மத்தை டெங்கு கொசு என்றவர்கள் எதிர்ப்பால் அமைதியாகி விட்டனர்: கவர்னர் ரவி

சனாதன தர்மத்தை டெங்கு கொசு என்றவர்கள் எதிர்ப்பால் அமைதியாகி விட்டனர்: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழர்களின் இதயங்களில் இருந்து, ராமரை யாராலும் அகற்ற முடியாது,'' என கவர்னர் ரவி தெரிவித்தார்.ஹரி, ஹேமா ஹரி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள, 'ஸ்ரீராமா இன் தமிழகம்:- பிரிக்க முடியாத பந்தம்' என்ற தமிழ், ஹிந்தி, ஆங்கில நுால் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட, மூத்த அரசியல் தலைவர் ஹெச்.வி.ஹண்டே, துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:இந்திய மக்கள் அனைவரது மனங்களிலும் நிறைந்திருப்பவர் ராமர். நாடு முழுதும் ராமர் கோவில்கள் உள்ளன. ராமர் சம்பந்தப்பட்ட பெயர்களை நாடெங்கும் மக்கள் வைத்துள்ளனர். ராமர் இந்தியாவை இணைக்கும் பாலமாக இருக்கிறார்.துரதிருஷ்டவசமாக அழகிய ஆன்மிக பூமியான தமிழகத்தில், ராமருக்கு எதிரான பிரசாரங்கள் நடந்தன.ராமர் கடவுளே இல்லை; ராமருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை; அவர் வட இந்திய கடவுள் என்றெல்லாம் பிரசாரம் நடந்தது. ஆனால், ராமர் இந்தியாவில் எங்கும் நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ராமர் கோவில்கள் உட்பட, ராமரோடு தொடர்புடைய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை ஸ்ரீராமா இன் தமிழகம் நுால் ஆவணப்படுத்தியுள்ளது. குக்கிராமங்களிலும் ராமர் கோவில்கள் உள்ளன.ராமர் இல்லாமல் இந்தியா இல்லை. ராமரின் வரலாறு, அவரை பற்றிய செய்திகள், மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும், மனதிற்கு அமைதியையும் அளிக்கின்றன. காந்திக்கு ஊக்கம் தந்தது ராமர் தான். ராமர் பற்றிய பிரார்த்தனை பாடலை தினந்தோறும் பாடியவர் காந்தி. இந்திய மக்களின் மனங்களில் இருந்து, ராமரை யாராலும் அகற்ற முடியாது. அதில், தமிழகம் மட்டும் விதிவிலக்கல்ல. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது வாரணாசிக்கும், தமிழகத்திற்கு இடையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த, நெருங்கிய ஆன்மிக, கலாசார தொடர்புகளை அனைவரும் அறிந்து கொண்டோம். தமிழகம் ஆன்மிக பூமி, சனாதனத்தை போற்றும் மண் என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.தமிழகத்தில் கலாசார அழிப்பு முயற்சிகள் நடந்தன. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவோடு ஒப்பிட்டு அழிப்போம் என்றவர்கள், மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததும், இப்போது அமைதியாகி விட்டனர்.இந்தியாவின் ஆன்மா சனாதன தர்மம். தர்மம் இல்லாமல் இந்தியா இல்லை. சனாதன தர்மம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது; அரவணைக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பை, சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. சனாதன தர்மம் இருக்கும் வரை, பாரதம் இருக்கும்; பாரதம் இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

MP.K
செப் 16, 2024 11:56

சனாதன தர்மம் என்பது இந்து தர்மம் ஆனால் இந்தியாவில் பல மத நம்பிக்கைகள் உள்ளன அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டிலும் அதே தான் வேற்றுமையில் ஒற்றுமை. மத சகிப்புத்தன்மை வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2024 22:26

ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று பலர் கூறியதால்தான் தமிழக இளைஞர்கள் ராமாயணம் படிக்கத் துவங்கிவிட்டனர் .... அவரது வாழ்க்கை குறித்து அறிய ஆர்வம் காட்டுகின்றனர் .... சனாதன எதிரிகளுக்கு நன்றி ......


Velan Iyengaar
செப் 15, 2024 12:19

கடேசியா பணிபுரிந்த இடத்தில் இருந்து அடித்து விரட்டாத குறையாக துண்டை காணோம் .. துணியை காணோம் என்று தப்பி ஓடி வந்த .....


Velan Iyengaar
செப் 15, 2024 09:39

சுற்றி சனாதன சீர்கேடுகளை வெச்சிக்கிட்டு கெவுனர் பதவி இன்ற கவசத்தை வெச்சிக்கிட்டு நீ என்னப்பபா எப்படி வேணுமானும் உளறலாம் ...பதவி இல்லாம இப்படி பேச உனுக்கு நெஞ்சில மஞ்சா சோறு இருக்கா ???


ஆரூர் ரங்
செப் 15, 2024 10:34

21 ம் பக்கத்தில் சொல்லாத சீர்கேடா? திராவிஷ அடையாளம் என்றாலே வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்வது. மனைவிக்குத் தெரியாமல் துணைவி இணைவி வைத்துக் கொள்வது, பெற்ற மகளையே தனக்குப் பிறந்த மகளல்ல என கோர்ட் டில் வழக்கு போடுவது போன்றவைதானே ?


Sudarsan Ragavendran
செப் 15, 2024 15:31

உன்னுடைய உண்மையான பெயரில் கருத்து எழுத்து துப்பு இல்லை . நீங்கள் அவரை சொல்கிறீர்கள்... உங்களை போன்ற டாஸ்மாக் திருடர்கள் கலக கொத்தடிமைகளுக்கு எவ்வளவு ஒப்புக்கொள்ளமாட்டிர்களே


Velan Iyengaar
செப் 15, 2024 09:38

புகைப்பட மூஞ்சிகளை பாருங்க ... ஹா ஹா ஹா .... காடு வா வா என்று சொல்லும் சொல்லும் கேசுகளை சுத்தி வெச்சிக்கிட்டு ஓமகுசும்பு வேலை பார்க்கும் கேடுகள் ... சமூக அவலங்கள்


Anonymous
செப் 15, 2024 10:54

ஆமாமா, தீய மூகா மூஞ்சியெல்லாம் அப்படியே இளமை கொப்புளிக்குது, ஸ்டாலின்,துரைமுருகன், ஆ,ராசா, டி.ஆர்,பாலு எல்லாம் போன வருஷந்தான் 18 வயசு முடிஞ்சு, 19 வயசு ஆரம்பிசிருக்கு.


Velan Iyengaar
செப் 15, 2024 09:36

இந்த கெவுனர் பதவி மட்டும் இல்லேன்னா இங்கு ஒரு ஈ காக்கா கொசு மதிக்குமா ??


Anonymous
செப் 15, 2024 11:01

கவர்னர் பதவியால இன்னைக்கு பொழைக்கிற நெலமையில இல்ல நம்ம கவர்னர், நல்லா படிச்சு, அப்புறமா IPS முடிச்சுட்டு, கேரளா கேடர்ல பல வருஷம் சர்வீஸ் பண்ணிட்டு, intelligence beauro ல pala வருஷம் சர்வீஸ் செஞ்சவரு, உன்னை மாதிரி, 200₹உபிஸ்க்கு இது புரியிறது கஷ்டம் தான், என்ன செய்ய, சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்? பரிதாபம்!


Anonymous
செப் 15, 2024 11:13

ரொம்ப கவல பட வேண்டாம், கெளம்புங்க.....


Mario
செப் 15, 2024 09:26

இந்த கொசு தொல்லை தாங்கமுடியால


பாமரன்
செப் 15, 2024 09:00

அது சரி... இவ்ளோ பேசுரேளே... சமஸ்கிருத மொழியில் இந்த பொஸ்தகத்தை வெளியிடனும்னு தோனுச்சா... ? அப்புறம் என்னத்தான் செய்யறேள் அந்த கோடிக்கணக்கான ரூபாய் ஃபண்டுகளை... அந்த மொழி எப்படி வளருமாம்... ஞாயமா நூலிழையில் கருத்து போடுற பகோடாஸ் கேட்க வேண்டிய கேள்வி இது


pmsamy
செப் 15, 2024 08:33

மூலிகை பெட்ரோல் ராமரா


karutthu
செப் 15, 2024 07:38

வேணு உனக்கு வேண்டுமானால் ஸ்ரீ ராமர் இல்லைஎன்று சொல்லிக்கோ ...எங்களுக்கு ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாம் உண்டு, நீ என்ன ஆஸ்திகனா ? இல்லை ராமசாமி ஆதரவாளனா ? உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன்னோடு வைத்துக்கொள் .இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போடாதே ..கடவுள் இல்லை என்று சொல்லுபவன் எல்லாம் கடவுளை நம்ப ஆரம்பித்து விட்டான் பெரியார் கூட தன் பெயரை மாற்றாமல் ராமசாமி நாயக்கர் என்ற தன பெயரை மாற்றிக்கொள்ளவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை