மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
தேனி:தேனி லோக்சபா தொகுதியில் தினகரன் 2வது முறையாக தோல்வியை தழுவியுள்ளார்.தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. இதில் தினகரன் அ.தி.மு.க., சார்பில் 1999ல் போட்டியிட்டு 3,03,881 ஓட்டுகள் பெற்றார். எதிர்த்து தி.மு.க.,வில் போட்டியிட்ட செல்வேந்திரனை 45,806 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றார். பின் 2004ல் போட்டியிட்ட தினகரன் காங்., வேட்பாளர் ஆரூணிடம் 21,155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது தினகரன் பெற்ற முதல் தோல்வி. 2024ல் அரசியலில் தனது சிஷ்யராக இருந்த தங்கதமிழ்செல்வனிடம் 2,72,825 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இத்தேர்தலில் தினகரன் பெற்ற ஓட்டுக்கள் 2,92,668.அ.ம.மு.க.,வினர் கூறுகையில், 'ஓட்டுப்பதிவு நேரத்தில் 'விட்டமின் ப' வழங்க வேட்பாளரே வேண்டாம்' என்றதாலும் தி.மு.க., சார்பில் தடைஏற்படும் என்ற எச்சரிக்கை நடவடிக்கையாலும் கடைசி நேர கவனிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என புலம்புகின்றனர்.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago