உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைது செய்யும் அளவுக்கு எதுவும் பேசவில்லை: தினகரன்

கைது செய்யும் அளவுக்கு எதுவும் பேசவில்லை: தினகரன்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:சென்னை, அசோக்நகர் அரசுப் பள்ளியில் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு பேசியது குறித்த வீடியோ பார்த்தேன். கைது செய்யும் அளவிற்கு அதில் எதுவும் அவர் பேசவில்லை.தி.மு.க., எப்போதுமே இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி. டில்லிக்குச் சென்று, பா.ஜ.,விடம் மண்டி இடுவர். தமிழகத்திற்கு வந்தால், பா.ஜ., தலைவர்களை கடுமையாக விமர்சிப்பர்.அதே இரட்டை வேடத்தைத்தான், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரத்திலும் மேற்கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் அமைச்சர் மகேஷ், எதற்காக இவ்வளவு சீற்றம் கொள்கிறார் என தெரியவில்லை.பழனிசாமி அ.தி.மு.க.,வில் இருக்கும் வரை கட்சி ஒன்று சேருவதற்கான வாய்ப்பில்லை. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.,விற்கு கட்டாயம் மூடுவிழா நடத்தப்பட்டு விடும். அதை பழனிசாமியே செய்து விடுவார். அதற்குள், பழனிசாமியோடு இருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.பொதுக்கூட்டமோ, மாநாடோ நடத்தினால், அதற்காக காவல்துறையினர் சில விதிமுறைகளின் கீழ் கேள்வி கேட்கத்தான் செய்வர். அதை உரிய வகையில் அணுகி பதில் அளித்தால், அனுமதி கொடுத்து விடுவர். அந்த வகையில் விஜய் நடத்தவிருக்கும் மாநாட்டுக்கும் அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன்.முன்னாள் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க முயன்றதாக, மன்னார்குடி திவாகரன் சொல்லி இருக்கிறார். அவர், அதையெல்லாம் சொல்ல, அப்போது அ.தி.மு.க.,வில் என்ன பொறுப்பில் இருந்தார்? நிஜத்திலும் சகுனி வேலை பார்க்க ஆட்கள் உண்டு. அப்படித்தான், அவரையெல்லாம் நான் பார்க்கிறேன்.இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை