| ADDED : ஜூன் 17, 2024 12:31 AM
பவானி,: ஈரோடு மாவட்டம், பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சேது மணிகண்டன், 23; வெல்டிங் கம்பெனி ஊழியர். இரு ஆண்டுகளுக்கு முன், பவானி, காமராஜர் நகரை சேர்ந்த, 19 வயது பெண்ணை காதலித்தார். பின், இருவரும் பிரிந்தனர். பவானி, செங்காடு, கோட்டை நகரை சேர்ந்தவர் குகநாதன், 26. இவர், குமாரபாளையத்தில் தள்ளுவண்டியில் பீசா, பர்க்கர் விற்கிறார். சேது மணிகண்டனை பிரிந்த பின், அப்பெண் குகநாதனை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் அப்பெண் விவகாரம் தொடர்பாக, சேது மணிகண்டனை மொபைல் போனில் அழைத்த குகநாதன், பவானி அரசு மருத்துவமனை எதிரே வருமாறு கூறியுள்ளார். அவரும் வர, நள்ளிரவு, 12:00 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த குகநாதன், கத்தியால் சேது மணிகண்டன் வயிற்றில் குத்தி விட்டு தப்பினார். வலியில் துடித்த சேது மணிகண்டன் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். பவானி போலீசார் குகநாதனை கைது செய்தனர்.