உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்டம் தோறும் அரசு முதியோர் இல்லம்; உயர் நீதிமன்றம் உத்தரவு

மாவட்டம் தோறும் அரசு முதியோர் இல்லம்; உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லம் அமைக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.துாத்துக்குடி அதிசயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் விதிகளின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவற்ற மூத்த குடிமக்கள், கைவிடப்பட்ட பெற்றோருக்கு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறிஉள்ளார்.அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. பிறப்பித்த உத்தரவு:மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லமாவது அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசு வழங்கும் மானிய உதவியை தடை செய்யாது.கட்டுமான பணியை ஆறு மாதங்களில் துவக்காவிடில் வழக்கை மீண்டும் நடத்த, உரிமை கோரி மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

T RAMAKRISHNAN
செப் 12, 2024 06:43

சமூகத்தில் இத்தகைய தீர்ப்புகள் வரவேற்கதக்கது ஆனால் இவர்களது பராமரிப்புக்கு மகன்கள் மற்றும் மகள்கள் இவர்களிடமிருந்து கட்டாயமாக கட்டணம் வசூலிக்க வேண்டும்


Ram pollachi
செப் 10, 2024 14:04

நீதிமன்ற வளாகத்தில் முதியோர் இல்லங்கள் அமைத்து கண்ணும் கருத்துமாக நீதிமான்களே பார்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். தனியார்கள் நடத்தும் முதியோர் இல்லங்களில் மாதாந்திர பராமரிப்பு தொகை எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா? அங்கன்வாடியை ஒழுங்கா நடத்த முடியவில்லை முதியோர் இல்லத்தை நடத்தி விட்டால் அது அதிசயம் ஆகிவிடும்.


தமிழ்வேள்
செப் 10, 2024 11:33

திராவிட அரசு அல்லேலூயா கும்பலிடம் ஒப்படைக்கும் .பிறகு படைப்பை முதியோர் இல்லம் போல , உறுப்பு திருட்டு பிணமாக்கி எலும்பு திருட்டு எல்லாம் நடக்கும் ...சாலையில் நடந்து போவோரைக்கூட கடத்தி , உறுப்பை எடுக்கும் எலும்பை எடுக்கும் திருவிளையாடல் நடக்கும் ..திமுக ஒட்டு பிச்சைக்காக சும்மா கிடக்கும்


Rajarajan
செப் 10, 2024 11:17

தீர்ப்பு வாழ்க. நன்றிகள்.


Kanns
செப் 10, 2024 08:48

Good Judgement


Sampath Kumar
செப் 10, 2024 08:37

muthiyoor illam ennum illi நிலையை ன்றமே தொடக்க ஊழ்வது இந்த சமூகத்தின் சீரழிவை காட்டுகின்றது சமுகம் பெரியவர்களி மதிப்பது இல்லை என்று ஆகி விட்டது அனைத்தும் போலி மாயம் ஆகி விட்டது அமெரிக்கா கலாசாரம் நன்றாக ஊடு urivi viathu appuram என்ன து துப்பாக்கி கலாசாரம் தான் பாக்கி அதுவும் வந்து விட்டால் முதியோர்கள் இருக்க மாட்டார்கள்


N.Purushothaman
செப் 10, 2024 08:34

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உளள்து ...அதே போல இதில் யாரும் இல்லாத ஆதரவற்ற முதியோர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் கடுமையாக்க வேண்டும்.. இல்லையெனலில் பலரும் தங்கள் பெற்றோர்களை இங்கு அனுப்புவார்கள் ....பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகளை தண்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் ...


GMM
செப் 10, 2024 08:13

குடும்ப உறவை மாநில சட்டம் பிரிகிறது . அனைத்து நடவடிக்கையில் பெற்றோர் தேவை என்கிறது சமூக அமைப்பு. திருமணம் புரிய பெற்றோர் தேவையில்லை என்கிறது சட்டம் . ஒவ்வொரு வார்டிக்கும் முதியோர் இல்லம் தேவை . அரசு நடத்துவது கடினம்.


Ravi Kulasekaran
செப் 10, 2024 07:41

இந்த அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறதா பயம் இருக்கிறதா சுத்தமாக இல்லை தொடர்ந்து இந்து வீரோத போக்கு


sridhar
செப் 10, 2024 07:17

அப்படி தொடங்கினால் அந்த மாற்று மத காரர்களை உள்ளே விடாதீர்கள் , அத்தனையும் விஷம்.


சமீபத்திய செய்தி