உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

திருப்பூர்: திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், முழுமையாக ஹிந்தியில் நேற்று நடத்தப்பட்டது.திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பீஹார், உ.பி., உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இந்திய கம்யூ., கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூர், ஏ.ஐ.டி.யு.சி., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, திருப்பூர் முழுதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.நேற்றைய கருத்தரங்குக்கு, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால், கருத்தரங்கம் முழுதும் ஹிந்தியிலேயே நடத்தப்பட்டது.ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் வஹிதா நிஜாம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக ஏ.ஐ.டி.யு.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஹிந்தியிலேயே பேசினார்.நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழில் பேசிய எம்.பி., சுப்பராயன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோரது பேச்சுகள், ஹிந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டன.தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ., சார்பில், முழுக்க முழுக்க ஹிந்தியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

veeramani
பிப் 24, 2025 09:40

பொதுவாக கம் முனிஸ்ட்கல் தங்களுக்கு என ஒரு நியதி என நடப்பவர்கள். இதில் கூட்டணியாவது கத்திரிக்காய் ஆவது . எவர் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்பவர்கள். இவர்களது டார்கெட் தொழிசாலை முதலாளிகள் , பாவ ஒன்றுமறியா தொழிலாளிகளி முலை சலவை செய்து பிரச்சினை செய்பவர்கள் இவர்கள். தமிழ்த்தாயின் பிரிய மகன் கலனாரின் தவப்புதல்வன் உடன் கூட்டணியில் இருந்து கொண்டே ஷண்முகம் தமிழக அரசிய எதிர்ப்போம் என போர்க்குரல் கொடுக்கிறார், ம ற்றவர் சாம்சங் தொழிற்சாலையை மூடுவோம் என மிரட்டல் . இவர்களுக்கு ஒட்டு கேட்பது எப்படி என சூரிய கட்சியினர் சிந்திக்கவேண்டும்


Kalyanaraman
பிப் 24, 2025 08:13

இவனுங்க எப்போதுமே ஊருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயம். தமிழ்... தமிழ் ...ன்னு சொல்லிக்கிட்டே சன் டிவி, ரெட் ஜெயன்.... ன்னு ஆங்கிலம். தயாநிதி கலாநிதி இன்பநிதி உதயநிதி என்று சம்ஸ்கிருதம். ஆனால் தொண்டனுங்க மட்டும் மலர்விழி, தமிழினி, தமிழ் ஒளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் "அறிவுள்ள" தொண்டர்கள்.


sankaranarayanan
பிப் 24, 2025 08:09

படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன் கோயிலை என்பார்கள் அதுபோன்றே இந்த திராவிட கட்சிகளில் அரசியல் அவரவர்கட்சியில் தலைவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு மக்கள் தலையாட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள் இவர்களுக்கு தலையாட்டி ஆட்டியே மக்களுக்கு கழுத்து வலி வந்துவிடும் போலிருக்கிறது பேசாமல் மும்மொழி கொள்கைகைக்கே சம்மத்தித்து மத்திய அரசு கொடுக்கும் நிதியை பெற்று ஹிந்தி அல்லாத ஒரு இந்திய மொழியை கற்றுக்கொடுத்தாலே போதும் தமிழ்நாட்டில் அமைதி நிலவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை