உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது

தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கிடைக்காது

சென்னை:'பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால், தி.மு.க., கூட்டணிக்கு 'டிபாசிட்' கூட கிடைக்காது. இதனால், பிரதமரின் வருகை குறித்து, முதல்வர் ஸ்டாலின் புலம்பித் திரிகிறார்' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பா.ஜ., அரசு ஊழல் செய்ததாக பொய் குற்றச்சாட்டை உரக்கக் கூறுவதைவிட, முறையான ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடுங்கள். நாங்கள் நேர்மையானவர்கள்; அத்தகைய குற்றச்சாட்டை வெளிப்படையாக எதிர்கொள்வோம்.தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பேரிடர் நிவாரணத் தொகையில் இருந்துதான், மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதை, மத்திய நிதி அமைச்சர் தெளிவுபடுத்திய பின், மீண்டும் மீண்டும் அதே பொய்யை ஸ்டாலின் சொல்வது, அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு அழகல்ல.பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வருவதால், தி.மு.க., கூட்டணிக்கு டிபாசிட் கூட கிடைக்காது. இதனால் பிரதமரின் வருகை குறித்து, ஸ்டாலின் புலம்பித் திரிகிறார்.மீண்டும் அமைய உள்ள மோடி ஆட்சியில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் நடந்து வரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறித்து, விசாரிக்க கமிஷன் அமைத்து, விசாரிக்கப்படும். அப்போது, தமிழகத்தை ஆட்கொண்டு வரும் மோடி அலையானது, ஸ்டாலின் பொய்களோடு சேர்த்து, தங்களின் வரலாற்றையும் வாரி சுருட்டிவிடும்.இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ