உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 தொகுதிகளில் தி.மு.க., டம்மி வேட்பாளர்கள்: சீமான்

5 தொகுதிகளில் தி.மு.க., டம்மி வேட்பாளர்கள்: சீமான்

சென்னை:சென்னையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள், 40 பேரை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:எல்லா கட்சிகளுக்கும், எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. தகுதி வாய்ந்த, 40 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். மருத்துவர்கள், பேராசிரியர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளோம். மற்ற கட்சிகளில் அதே முகங்களை நிறுத்தியுள்ளனர். நம்மை பா.ஜ.,வின், 'பீ டீம்' என்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான் மெயின், 'பீ டீம்' ஆக இருக்கிறார். பா.ஜ., ஏழு இடங்களை கேட்ட நிலையில், ஐந்து இடங்களில் டம்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். என்.ஐ.ஏ., சோதனை நடத்தி, நாங்கள் பா.ஜ.,வின், 'பீ டீம்' இல்லை என்று நிரூபித்ததற்கு நன்றி.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்கின்றனர். தரையில் இருந்து இயக்கி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஒரு நாள் சாலையில் போட்டு உடைக்கும் காலம் வரும். நாங்கள் கேட்ட ஆட்டோ, தீக்குச்சி போன்ற சின்னங்களை, மற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எடுத்துக் கொடுக்கிறது. எந்த சின்னம் கொடுத்தாலும், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். சின்னத்திற்கு ஓட்டு இல்லை; சீமானுக்கு தான் ஓட்டு என்று கூறி, என்னை மிகப்பெரிய தலைவனாக்கி விட்டனர். டிஜிட்டல் இந்தியாவில், 20 நாட்களில் தேர்தல் நடத்தி, 44 நாட்களுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை நடத்துகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

வீரப்பன் மகள்

நாம் தமிழர் கட்சியில், 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக, சந்தனகடத்தல் வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், பா.ஜ.,வில் இணைந்து, ஓ.பி.சி., அணி மாநில துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

40 வேட்பாளர்கள் யார், யார்?

திருவள்ளூர்- ஜெகதீஷ் சந்தர்வடசென்னை - அமுதினிதென்சென்னை - தமிழ்செல்விமத்தியசென்னை - கார்த்திகேயன்ஸ்ரீபெரும்புதுார் - ரவிச்சந்திரன்காஞ்சிபுரம் - சந்தோஷ்குமார்அரக்கோணம் - அப்சியா நஸ்ரின்வேலுார் - மகேஷ் ஆனந்த்தர்மபுரி - அபிநயாதிருவண்ணாமலை - ரமேஷ்பாபுஆரணி - பாக்கியலட்சுமிவிழுப்புரம் - களஞ்சியம்கள்ளக்குறிச்சி - ஜெகதீசன்சேலம் - மனோஜ்குமார்நாமக்கல் - கனிமொழிஈரோடு - கார்மேகன்திருப்பூர் - சீதாலட்சுமிநீலகிரி - ஜெயகுமார்கோவை - கலாமணி ஜெகநாதன்பொள்ளாச்சி - சுரேஷ்குமார்திண்டுக்கல் - கயிலைராஜன் துரைராஜன்கரூர் - கருப்பையாதிருச்சி - ராஜேஷ்பெரம்பலுார் - தேன்மொழிகடலுார் - மணிவாசகன்சிதம்பரம் - ஜான்சி ராணிமயிலாடுதுறை - காளியம்மன்நாகப்பட்டினம் - கார்த்திகாதஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்சிவகங்கை - எழிலரசிமதுரை - சத்யாதேவிதேனி - மதன் ஜெயபால்விருதுநகர் - கவுசிக்ராமநாதபுரம் - சந்திரபிரபா ஜெயபால்துாத்துக்குடி - ரொவினா ரூத் ஜேன்தென்காசி - இசை மதிவாணன்திருநெல்வேலி - சத்யாகன்னியாகுமரி - மரிய ஜெனிபர்கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்புதுச்சேரி - மேனகா***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ