உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்பி எடுக்க தி.மு.க.,வினர் ஆர்வம்

செல்பி எடுக்க தி.மு.க.,வினர் ஆர்வம்

சென்னை : ஈ.வெ.ரா., பிறந்த நாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு, த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, நீல நிற சுசூகி ஸ்விப்ட் காரில் வந்திருந்தார். மாலையுடன் நடந்து சென்று, ஈ.வெ.ரா., சிலைக்கு மரியாதை செலுத்தினார்.அங்கிருந்த தி.மு.க., இளைஞரணியினர், விஜயுடன் 'செல்பி' எடுப்பதற்கு போட்டி போட்டனர். சிலருடன் மட்டும் போட்டோ எடுத்துக் கொண்ட விஜய், 5 நிமிடத்திற்குள் அங்கிருந்து சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
செப் 18, 2024 09:05

பூனைக்குட்டி வந்துவிட்டது வெளியே? கழகத்துடன் சீட் ஷேரிங் எப்போது?


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 09:50

சீட் ஷேரிங் தேர்தல் காலத்தில்தானே தேவை ???? அதுவல்ல விஷயம் .... விஜயின் கட்சி திமுகவை எதிர்த்தால்தான் இரு கட்சிகளுக்கும் ஆதாயம் ..... தவிர திராவிடக் கொள்கைகளை எதிர்த்து களமிறங்கினால் எங்குமே டெபாசிட் கூட மிஞ்சாது .... அதனால்தான் இக்கட்சி பணம் கொடுத்து அல்லது மிரட்டப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை