உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்; 10 கி.வாட் வரை ஒப்புதல் வேண்டாம்

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்; 10 கி.வாட் வரை ஒப்புதல் வேண்டாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்கப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்திற்கு, தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தர விட்டுள்ளது.தமிழகத்தில் வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் 1 கிலோ வாட், 5, 10, 15 கி.வா., என, பல்வேறு திறன்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மின் நிலையம் அமைக்கும்போது, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், சாத்தியக்கூறு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் போது, டிரான்ஸ்பார்மரின் திறன் போன்ற தொழில்நுட்ப விபரங்களை பார்த்து, பிரிவு அலுவலகங்களில் ஒப்புதல் அளிக்கப்படும். இதற்கு காலதாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.3 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெற தேவையில்லை என மின் வாரியம் இந்தாண்டு ஜனவரியில் அறிவித்தது.நாடு முழுதும் 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அதிக மானியம் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பலரும் அந்த மின் நிலையம் அமைக்க விண்ணப்பித்து வருகின்றனர்.10 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Lion Drsekar
மே 27, 2024 10:19

பாராட்டு ஒரு புறம் இருந்தாலும், அந்த குறைக்கும் கப்பம் கட்டுவதற்கு இயற்கை காற்றும் நீர், சூரிய ஒளியை இலவசமாக கொடுத்தாலும் பார்க்கும் வரிவிதிக்கும் நம்மவர்கள் மக்களை சும்மாவா விடுவார்கள், வேடிக்கை பார்க்கத்தானே போகிறோம் , அதற்கும் வரி கட்ட சொல்வார்கள், வந்தே மாதரம்


Lion Drsekar
மே 26, 2024 17:52

இனி அவரவர் வருங்காலங்களில் இப்படி தனக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்தாள் இதற்க்கென பணியில் அமர்த்தப்பட்ட துறைக்கு ? கவலையே வேண்டாம் மக்கள் பிரநிதிகள் பார்த்துக்கொள்வார்கள் , எப்போதும் போல் சம்பளம், குளிர்சாதனை அரை, இலவச கார்கள் எல்லாம் அனுபவிக்கும் வகையில் இவர்களிடத்தில் இருந்து கட்டாய வரி வசூலிக்கப்படும் , எங்குமே யாரும் இதில் இருந்தும் வரி கட்டுவதில் இருந்து தப்பிக்கவே முடியாத அளவுக்கு அருமையாக பார்த்துக்கொள்வார்கள் . வந்தே மாதரம்


A P
மே 26, 2024 12:07

அப்படி கமிசன் கேட்டு எவனாவது வந்தானானால் இரண்டு போடுங்கள்.


Balasubramanian
மே 26, 2024 12:06

சூரியன் மறையும் கையால் முகத்தை மூடிக்கொண்டு ஒருவர் வெளி நாடு செல்வார் இலை உதிர்ந்து போகும் மையமாக மாநில அவையில் யாருக்கும் இடம் கிடைக்காது !


Jai
மே 26, 2024 12:01

இயற்கையை காப்பாற்றி, மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின்சார வாரியத்தின் கடனை குறைத்து மற்றும் மக்களின் மின்சார கட்டணத்தை குறைக்கும் நல்ல முயற்சியாக தெரிகிறது. வழக்கம்போல் மத்திய அரசின் திட்டம் என்பதற்காக கிடைப்பில் போடாமல், காலம் தாழ்த்தாமல், வீண் பிடிவாத அரசியல் செய்யாமல், நிலக்கரி கொள்முதல் கமிஷன் குறைவது பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.


Jai
மே 26, 2024 12:00

இயற்கையை காப்பாற்றி, மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின்சார வாரியத்தின் கடனை குறைத்து மற்றும் மக்களின் மின்சார கட்டணத்தை குறைக்கும் நல்ல முயற்சியாக தெரிகிறது. வழக்கம்போல் மத்திய அரசின் திட்டம் என்பதற்காக கிடைப்பில் போடாமல், காலம் தாழ்த்தாமல், வீண் பிடிவாத அரசியல் செய்யாமல், நிலக்கரி கொள்முதல் கமிஷன் குறைவது பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.


Nadanasigamany Ratnasamy
மே 26, 2024 09:49

உதயசூரியனுக்கே ஷாக் அடிக்கும் சோலார் ஷாக். ஐயோ வடை போச்சே


Pandi Muni
மே 26, 2024 10:49

அஸ்தமன சூரியன்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 26, 2024 08:11

ஆனாலும் சோலார் வரவு-செலவு-மீதம் கணக்கீடு செய்யும் மீட்டர் பொருத்தும் போது வாங்க வேண்டிய கமிஷனை வாங்காமல் விடமாட்டார்கள். திராவிட மாடல்னா சும்மாவா?


Kasimani Baskaran
மே 26, 2024 07:55

கமிஷன் அடிக்க வழியில்லை, அதாவது புதிய வித்தையை கண்டுபிடிக்கும் வரை.


enkeyem
மே 26, 2024 10:37

இருக்கவே இருக்கிறது நெட் மீட்டர். அதை பொறுத்த ஜவ்வு கணக்கா இழுத்தடித்து கமிஷனை கறந்து விடுவார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை