உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள்

சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடை அருகே மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வரை கிராம மக்கள் தூக்கிச் சென்றனர்.கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை கிராம ஊராட்சியில், கடம்பன் கோம்பை என்னும் மலைக்கிராமம் உள்ளது. பில்லூர் அணையை ஒட்டி வனப்பகுதிகள் சூழ இக்கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் போதிய தார் சாலை வசதி இல்லை, இருக்கும் பாதையும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் ஜீப் அல்லது ஆட்டோ போன்றவையை தான் போக்குவரத்திற்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடம்பன் கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வாயிலாக அவரது உடல் நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கடம்பன் கோம்பை அருகே உள்ள நீராடி பகுதிவரை கொண்டு வரப்பட்டது. சாலை வசதி இல்லாததால் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க முடியவில்லை. அங்கேயே அவரது உடல் இறக்கி வைக்கப்பட்டது.இதையடுத்து, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்களே டோலி கட்டி உடலை தோளில் சுமந்து எடுத்து சென்றனர். உரிய சாலை வசதி இல்லாத நிலை பல ஆண்டுகளாக நீடிப்பதாகவும், அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

D.Ambujavalli
பிப் 24, 2025 06:12

இன்னும் ஒரே வருஷம் தேர்தல் அறிவிப்பு வரட்டும், மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் கும்பிடு போட்டுக்கொண்டு வருவார்கள் அடுத்து நாங்கள்தான் வருவோம் கட்டாயம் உங்க கிராமத்தை ரோம் நகரம், நியூயார்க் ஆக மாற்றுவோம் என்பார்கள் நீங்களும் குவார்ட்டர், பிரியாணி, தக்ஷிணை 200/ 300 வாங்கிக்கொண்டு மீண்டும் 4 வருஷம் கழித்து இதே குறையைச் சொல்லிப் புலம்புவீர்கள்


Ramesh Sargam
பிப் 23, 2025 20:47

கொஞ்சம் அந்த மொழி அரசியலைவிட்டு, இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் தமிழக மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்த முயற்சிகள் எடுக்கவும். இதுபோன்ற வளர்ச்சி அடையாத இடங்களுக்கு சென்றால் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தெரியவரும். நீங்கள் அங்கு செல்கிறீர்கள் என்றால் உடனே ரோடு போடுவார்கள், தெருவிளக்கு பொறுத்துவார்கள், குழாயில் தண்ணீர் வரும். அப்படியாவது மக்களுக்கு நல்லது ஆகட்டும்.


Ramesh Sargam
பிப் 23, 2025 20:19

திமுகவினர் வெட்கித்தலைகுனியவேண்டும். GET OUT STALIN.


Kasimani Baskaran
பிப் 23, 2025 17:29

அரை நூறாண்டாக தேனும் பாலும் ஓடும் திராவிட ஆட்சியில் இது சாத்தியமில்லை.


Rogith K
பிப் 23, 2025 17:24

உபி, மாபி, காப்பினு பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தா சொல்லுங்க பொங்குறோம்? மற்றபடி விடியலில் நடந்தா கடந்து போய்டுவோம்? பெரியார்? திராவிட மண்ணுணா சும்மாவா?


chandrasekar
பிப் 23, 2025 16:42

அரசின் கவனத்துக்கு இங்குள்ள மக்கள் தங்கள் குறைகளை சரியான முறையில் எடுத்துச்சென்றால் நிச்சயமாக அடிப்படை வசதிகளான மின்சாரம் சாலைகள் குடிநீர் ரேஷன் கடை ஆரம்ப சுகாதார நிலையம் இவை எல்லாவற்றையும் அமைத்து தர அரசிடம் வருஷாந்தர வரவு செலவு திட்டத்தில் அந்தந்த துறைகளில் நிதி ஒதுக்கீடு தேவையான அளவு இருக்கும். பொதுவான குறைகளை இப்படி சொல்லுவதால் பலன் ஒன்றும் நேரப்போவதில்லை


N Sasikumar Yadhav
பிப் 23, 2025 18:48

முதுகு உடைகிற அளவுக்கு முட்டு கொடுக்கிறீர்கள் . திருட்டு திராவிட களவானிங்கதான் பாரதம் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்கிறானுங்க .?. கொள்ளையடிக்க மட்டும் தெரிந்தவன்களுக்கு இது தெரியாதா


Kasimani Baskaran
பிப் 23, 2025 18:56

சட்டசபைக்கு எம்எல்ஏ ஒருவரை தேர்ந்து எடுத்து எதற்க்காக அனுப்பி வைத்தீர்கள்?


V Venkatachalam
பிப் 23, 2025 19:40

அந்த பஞ்சாயத்து தலைவர்,வார்டு உறுப்பினர் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள்? பொதுமக்கள் போய் அவர்கள் கிட்ட பிச்சை எடுக்கணுமா? வேட்பு மனு குடுக்கிறவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை