உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்னி பஸ்சை தாறுமாறாக ஓட்டிய போதை டிரைவர்

ஆம்னி பஸ்சை தாறுமாறாக ஓட்டிய போதை டிரைவர்

பல்லடம்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து- கர்நாடக மாநிலம், பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ் ஒன்று, 50 பயணியருடன் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தது.பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையம் வரும்போது, பஸ் தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது.பஸ்சில் பயணித்தவர்கள் சந்தேகம் அடைந்து விசாரிக்கும்போது, டிரைவர் இருக்கை அருகே மது பாட்டில் இருந்ததை கைப்பற்றினர். மது பாட்டிலை கைப்பற்றிய பொதுமக்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார், விசாரணை மேற்கொண்டு டிரைவர் வெங்கடாஜலபதி, 32, என்பவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. பயணியர், மாற்று பஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். 'டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.எஸ்.பி., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
ஆக 27, 2024 21:54

மது விற்ற அரசுக்கு என்ன தண்டனை ?


Mani . V
ஆக 27, 2024 14:48

அப்பு இதுக்கு யார் காரணம்? திமுக வினர்தான் காரணம். அதுக்கே நீங்கள் எங்களுக்கு பாராட்டு விழா நடத்தணும். கொஞ்சம் விட்டு இருந்தால் அந்த ஓட்டுநர் அனைவரையும் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை