உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் நில அதிர்வு? பீதியில் பதறியடித்து வெளியேறிய மக்கள்

சென்னையில் நில அதிர்வு? பீதியில் பதறியடித்து வெளியேறிய மக்கள்

சென்னை: சென்னையில் நில அதிர்வு காரணமாக ஐந்து மாடி கட்டடம் குலுங்கியதால், அங்கு பணியில் இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். நாடு முழுதும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த வரைபடத்தை, தேசிய புவியியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், நடுத்தர பாதிப்பு ஏற்படக்கூடிய பட்டியலில் சென்னை உள்ளது. இருப்பினும், சென்னையில் பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது இல்லை. அதே நேரம், வங்கக்கடலில் அல்லது அது சார்ந்த பகுதிகளில் அரிதாக நில நடுக்கம் ஏற்படும்போது, அதன் தாக்கம் நில அதிர்வாக சென்னையில் உணரப்பட்ட வரலாறு உண்டு. இந்நிலையில், சென்னை நந்தனத்தில் ஒரு ஐந்து மாடி கட்டடத்தில், பல்வேறு தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.நேற்று பகல் 12:00 மணிக்கு, அந்த கட்டடம் குலுங்கியதாக தகவல் பரவியது. அந்த கட்டடத்தில் பணியில் இருந்த அனைவரும் அச்சத்துடன் வெளியேறினர். கட்டடத்துக்கு வெளியிலும், அண்ணா சாலையிலும், பணியாளர்கள் மொத்தமாக கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக எந்த விபரமும் பதிவாகவில்லை என, தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vaduvooraan
மார் 01, 2025 12:42

சற்று மிகையான செய்தி என்று படுகிறது. அறுபது வருடங்களாக தமிழ் சமுதாயத்தையே தலை கீழாக புரட்டிப்போட்ட திமுக ஏற்படுத்திய பேரிடரையே பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அந்த ஆட்சியை ஆட்சியில் அமர்த்தும் நம்ம மக்கள், இந்த நில அதிர்வுக்கெல்லாம் பயப்படுவார்கள் என்று தோன்றவில்லை


veeramani
மார் 01, 2025 09:21

செட்டிநாட்டு விஞ்ஞானியின் குமுறல் சென்னையின் அடுக்குமாடி வளர்ச்சி என்பது புவியியல் சார்பில் ஏற்புடையது இல்லை. மும்பய் யை கா பி பண்ணி சென்னையிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மும்பாய் புவி அமைப்பு கருங்கல் பாறைகளை அடிதலித்தில் உடையது. ஆனால் சென்னையில் அதிகம் களிமண் தரை அமைப்பு, பின்னர் கடற்கரை பகுதியில் குறு பெரு மணல் அடித்தளம் . சென்னையில் குடியிருப்புகளுக்கு பைல் பவுண்டஷன் போடுவதற்கு சுமார் நூரூ அடி துளைகள் இடப்படுகிறது. இதனால் கடல் உப்பு தண்ணீர் சென்னையில் புகுந்து பத்து வருடங்களுக்குமேல் பிரச்சினை. இதனால்தான் கட்டிட இரும்பு கம்பிகளும் காணகிரிட்டும் துருபிடிக்கின்றது . நாம்வாழும் பூமியில் பல துளைகள் போட்டுவிட்டு பூமியை பலவீனம் செய்துவிட்டனர் . இதனால்தான் காட்டிட பளுவை தாங்க உடையாமல் சிறு அதிர்வும் பெரிதாக உணரப்படுகிறது . இனிமேல் அய்யா அம்மா என்றால் பூமி கேட்கும் அளவில் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை